News August 4, 2024
ஆதிக்கம் செலுத்திய இலங்கை ஸ்பின்னர்கள்

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ODI போட்டியில், இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 241 ரன்கள் என்ற குறைவான இலக்கையே SL நிர்ணயித்திருந்தாலும், அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சால் IND வீரர்களை திணறடித்தனர். குறிப்பாக, ஜெஃப்ரி வாண்டர்சே, அசலங்கா ஆகியோரது சுழலில் மட்டும் 9 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. கடைசி ODI போட்டி ஆக.7ஆம் தேதி நடைபெற உள்ளது.
Similar News
News March 6, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 6, மாசி 22 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: த்ரிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
News March 6, 2026
‘மக்கள் தொகை 2027’ சின்னம் அறிமுகம்

மக்கள் தொகை 2027 பணிகள் ஏப்.1-ல் துவங்கும் நிலையில், அது முற்றிலுமாக டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், இப்பணிக்கான புதிய பிரசார உருவ சின்னங்களையும், ஹவுஸ் லிஸ்டிங் பிளாக் கிரியேட்டர், HLO ஆப், செல்ப் எனுமெரேஷன் போர்டல், சென்செஸ் மேனேஜ்மெண்ட் & மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட 4 அம்சங்களை அமித்ஷா அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்படி, மக்கள் தங்களது சுயவிவரங்களை ஆன்லைனில் பதிவேற்றலாம்.
News March 6, 2026
கருப்பு கவுனி அரிசி நன்மைகள்

அதிக நார்ச்சத்து, குறைவான கலோரிகள் & கார்போஹைட்ரேட் கொண்ட கருப்பு கவுனி அரசியை, சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதிக நார்ச்சத்து காரணமாக குடல் இயக்கத்திற்கும், வயிற்றுப்புண்களை குணமாக்குவதற்கும் உதவுகிறது. கல்லீரல் நச்சுகளை நீக்க, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற, BP பிரச்னையை தீர்க்க கருப்பு கவுனி அரிசியில் பொங்கல், லட்டு போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.


