News August 4, 2024
ஆதிக்கம் செலுத்திய இலங்கை ஸ்பின்னர்கள்

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ODI போட்டியில், இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 241 ரன்கள் என்ற குறைவான இலக்கையே SL நிர்ணயித்திருந்தாலும், அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சால் IND வீரர்களை திணறடித்தனர். குறிப்பாக, ஜெஃப்ரி வாண்டர்சே, அசலங்கா ஆகியோரது சுழலில் மட்டும் 9 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. கடைசி ODI போட்டி ஆக.7ஆம் தேதி நடைபெற உள்ளது.
Similar News
News January 17, 2026
CM ஸ்டாலின் கொடி அசைவில் சீறும் காளைகள்!

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார். அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராமநாதபுரத்தில் ₹3 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனாரின் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை CM ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
News January 17, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 17, தை 3 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சதுர்தசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News January 17, 2026
போதைப்பொருள் கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படை

கடந்தாண்டில் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் குறித்து தமிழக போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பொது போக்குவரத்தை பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தல் அதிகம் நடந்திருப்பது தெரியவந்தது. இதனால் பஸ், ரயில், விமானநிலையங்களை கண்காணிக்க சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. SI தலைமையில் 2 போலீசார் அடங்கிய இத்தனிப்படைகளின் முழுநேர பணியே, போதைப் பொருள் கடத்தலை தடுப்பதுதான்.


