News April 19, 2025
டீ குடிக்குறப்ப சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கா?

பலருக்கும் டீயுடன், சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால், அப்பழக்கம் மிகவும் அபாயகரமானது என Annals of Internal Medicine வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கிறது *இதயம் *மூளை பக்கவாதம் *வயிற்றுப்புண் *நுரையீரல் சுருங்குதல் *நினைவாற்றல் இழப்பு *கை, கால்களில் புண்கள் *கரு உருவாமை பிரச்னை *ரத்த சோகை *மலச்சிக்கல் என போன்ற பிரச்னைகள் வரலாம். சிகரெட்டே கெடு. உடனே நிறுத்துங்கள். SHARE IT.
Similar News
News July 6, 2025
மீண்டும் இணைந்த தாக்கரே பிரதர்ஸ்.. MH-ல் புதிய வரலாறு!

2006-ல் சிவசேனாவில் இருந்து விலகி MHS-யை தொடங்கிய ராஜ் தாக்கரே மீண்டும் உத்தவ் தாக்கரே(UBT) உடன் இணைந்துள்ளார். மராட்டியத்தில் இந்தி மொழி திணிப்புக்கு ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற முழக்கத்தோடு கைகோர்த்திருக்கும் இருவரும் மும்பை மாநகராட்சிக்கு விரைவில் நடக்கவுள்ள தேர்தலில் சேர்ந்து களம் காண உள்ளனராம். இது, அங்கு ஆளும் பாஜக அரசுக்கு சற்று அதிர்ச்சியும், சிவசேனாவினருக்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளது.
News July 6, 2025
போர் நிறுத்தம் தொடர்பாக ஹமாஸ் தகவல்

காஸாவில் 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான முன்மொழிவுக்கு சாதகமான பதிலை அளித்திருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. முன்மொழிவில் சில திருத்தங்களை மட்டும் ஹமாஸ் மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து, ஹமாஸுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாலஸ்தீன – அமெரிக்க பேச்சாளர் பிஷாரா பாஹ்பா, முன்மொழிவின் திருத்தங்கள், போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தடுக்காது என நினைக்கிறேன் என்றார்.
News July 6, 2025
சாக்ரடீஸ் பொன்மொழிகள்

*மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வமாகும். ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை. * உங்களை நீங்களே அறிவதுதான் ஞானத்தின் உச்சம்.
*உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிவதே உண்மையான ஞானமாகும். *வாழ்க்கையில் உண்மையான ஆபத்து மரணமல்ல, ஒரு தீய வாழ்க்கையை வாழ்வதே ஆகும். *எல்லா போர்களும் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகவே நடத்தப்படுகின்றன.