News April 19, 2025

டீ குடிக்குறப்ப சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கா?

image

பலருக்கும் டீயுடன், சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால், அப்பழக்கம் மிகவும் அபாயகரமானது என Annals of Internal Medicine வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கிறது *இதயம் *மூளை பக்கவாதம் *வயிற்றுப்புண் *நுரையீரல் சுருங்குதல் *நினைவாற்றல் இழப்பு *கை, கால்களில் புண்கள் *கரு உருவாமை பிரச்னை *ரத்த சோகை *மலச்சிக்கல் என போன்ற பிரச்னைகள் வரலாம். சிகரெட்டே கெடு. உடனே நிறுத்துங்கள். SHARE IT.

Similar News

News November 9, 2025

நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு

image

முறையாக பள்ளிக்கு வரும் +2 மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு எழுத <<18239237>>ஹால் டிக்கெட்<<>> வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், பொதுத்தேர்வு குறித்த மாணவர்களின் அச்சத்தை போக்க ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும், தேர்ச்சி பெற முடியாதோ என நினைக்கும் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பள்ளிகளில் அதற்கான பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 9, 2025

ரஜினி, அஜித் சம்பளத்துக்கு வருகிறது கட்டுப்பாடு

image

இனி படங்களின் லாப நஷ்டங்களில் நடிகர்களுக்கு பங்கு உண்டு என தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு படம் நஷ்டமானால், அந்த பாரத்தை தயாரிப்பு நிறுவனம் மட்டுமே தாங்கவேண்டிய சூழல் இருக்காது. ஒருவேளை வசூலை குவித்தால் நடிகர்களும் லாபம் பார்க்கலாம். மேலும், நடிகர்கள் வெப் சீரிஸ்களை தவிர்த்து திரைப்படங்களின் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

News November 9, 2025

சற்றுமுன்: பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

image

ஜப்பானின் Iwate மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் பொது ஒளிபரப்பு நிறுவனமான NHK தெரிவித்துள்ளது. Iwate மாகாணத்தின் கடலோரத்திலிருந்து 70 கி.மீ., தொலைவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி உருவாகியுள்ளதாகவும், அது விரைவில் பசிபிக் கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாகவும் NHK கூறியுள்ளது. அலையின் உயரம் சுமார் 3 அடி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!