News September 9, 2024
சாப்பிட்ட பின் இதை செய்யாதீர்கள்

உணவு உண்டபின் குறைந்தது 15 – 20 நிமிடங்கள் நடப்பது செரிமானத்திற்கு மிகவும் உதவும். சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது நல்லதுதான். ஆனால், குளிர்ந்த நீரை குடிப்பது செரிமானத்தை பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சாப்பிட்ட உடன் உட்காரவோ, படுக்கவோ செல்வது உடல் எடையை அதிகரிக்கும். மேலும், சாப்பிட உடன் டீ, காஃபி குடிப்பது நெஞ்செரிச்சலை உண்டாக்கும் என்றும் கூறுகின்றனர்.
Similar News
News August 19, 2025
ஷ்ரேயஸ் ஐயர், ராகுல் புறக்கணிப்பா ? ரசிகர்கள் ஷாக்

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல்லில் ஷ்ரேயஸ் 604 ரன்கள், ராகுல் 539 ரன்கள் குவித்த பிறகும் அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வீரர்கள் பட்டியலிலும் இருவரும் இடம்பெறவில்லை. ரிசர்வ் வீரர்களாக பிரசித் கிருஷ்ணா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
News August 19, 2025
பாஜக பாணியிலேயே பதிலடி கொடுத்த காங்கிரஸ்

நாட்டின் து.ஜனாதிபதி தேர்தலில் பிராந்திய அரசியலை கையில் எடுத்துள்ளன அரசியல் கட்சிகள். து.ஜனாதிபதி வேட்பாளராக தமிழரான CPR-ஐ தேர்ந்தெடுத்து திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது பாஜக. இதனையடுத்து பாஜக பாணியில் தெலங்கானாவை சேர்ந்த சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்து ஆந்திரா, தெலங்கானாவில் பாஜக கூட்டணிக்கு காங்கிரஸ் செக் வைத்துள்ளது.
News August 19, 2025
பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விலை குறையப் போகிறது..!

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டியை குறைக்கப் போவதாக PM மோடி அறிவித்திருக்கிறார். அதன்படி, 28%, 18% ஜிஎஸ்டி வரம்புகளில் இருக்கும் பெரும்பாலான பொருட்களின் வரி குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் விலை கணிசமாக குறைய உள்ளது. குறிப்பாக, ₹40,000 மதிப்புள்ள மின்னணு பொருட்களின் விலை ₹4,000 வரை குறைய வாய்ப்புள்ளது. SHARE IT