News October 20, 2025
மகிழ்ச்சி பரவ தலைவர்களின் தீபாவளி வாழ்த்துகள்

*அனைவருக்கும் மகிழ்ச்சியான, துடிப்பான தீபாவளி வாழ்த்துகள் – கவர்னர் ஆர்.என்.ரவி
*துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும் – EPS
*நெஞ்சம் நிறைந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்: ராமதாஸ்
*நாடெங்கும் வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்: செல்வப்பெருந்தகை
*இருள் இன்றுடன் விலகட்டும், மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும் – அன்புமணி
Similar News
News October 20, 2025
ஆபரேஷன் Sindoor 2.0; தயாராக இருக்கும் இந்தியா

இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தீவிரமாக தயாராகி வருவதாக இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி உறுதிப்படுத்தியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக கூறிய அவர், அதன் நோக்கம் அடையப்படும் வரை நடவடிக்கை தொடரும் என கூறியுள்ளார். முன்னதாக, ஆபரேஷன் சிந்தூரின் போது நடந்தது வெறும் டிரெய்லர்தான் என அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.
News October 20, 2025
திமுக தலைமை அலுவலகத்தில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். அண்மைக் காலமாக CM ஸ்டாலின், EPS, ராமதாஸ், ரஜினி, விஜய் உள்ளிட்ட முக்கிய நபர்களின் வீடுகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது போலீசாரை திக்குமுக்காட வைத்துள்ளது.
News October 20, 2025
மீண்டும் இந்தியாவை மிரட்டும் டிரம்ப்

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை எனில் இந்தியா மீது மேலும் வரிகளை விதிப்பேன் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். முன்னதாக, ரஷ்ய எண்ணெய்யை வாங்கமாட்டேன் என PM மோடி சொன்னதாக டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு, நாட்டு மக்களின் நலனே முக்கியம் என கூறி, மறுப்பு தெரிவித்து அவரது மூக்கை உடைத்தது இந்தியா. இதனால் கடுப்பான டிரம்ப் தற்போது இந்தியாவை மீண்டும் சீண்டி பார்த்துள்ளார்.