News October 20, 2025
மகிழ்ச்சி பரவ தலைவர்களின் தீபாவளி வாழ்த்துகள்

*அனைவருக்கும் மகிழ்ச்சியான, துடிப்பான தீபாவளி வாழ்த்துகள் – கவர்னர் ஆர்.என்.ரவி
*துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும் – EPS
*நெஞ்சம் நிறைந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்: ராமதாஸ்
*நாடெங்கும் வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்: செல்வப்பெருந்தகை
*இருள் இன்றுடன் விலகட்டும், மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும் – அன்புமணி
Similar News
News December 15, 2025
BREAKING: திமுகவில் கூண்டோடு ராஜினாமா

கோவை, விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்வதாக கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அங்குள்ள 9-வது வட்டச் செயலாளர் மயில்சாமி தலைமையில் 75-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தனிப்பட்ட காரணங்களுக்காக திமுகவில் இருந்து விலகியது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொங்கு பகுதியில் திமுகவை பலப்படுத்தும் முயற்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.
News December 15, 2025
IND vs SA: அக்சர் படேல் அணியில் இருந்து விடுவிப்பு

உடல்நிலை சரியில்லாத காரணத்தால், SA-க்கு எதிரான டி20 தொடரில் இருந்து அக்சர் படேல் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஷெபாஷ் அகமது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 5 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இந்தியா 2 போட்டிகளிலும், SA ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சியிருக்கும் 2 போட்டிகள் வரும் 17 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.
News December 15, 2025
இந்த எண்கள் பெண்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்!

பெண்களின் பாதுகாப்பிற்கு அரசு பல அவசர உதவி எண்களை கொடுத்துள்ளது. பின்வரும் இந்த எண்களை அனைத்து பெண்களும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் ★தேசிய பெண்கள் ஆணையம் – 181 ★பெண்கள் காவல் உதவி எண் – 1091 ★குழந்தைகள் உதவி எண் – 1098 ★அமிலத் தாக்குதல் பாதிக்கப்பட்டோருக்கான உதவி – 07533066009 ★சைபர் குற்ற உதவி எண் – 1930. அனைத்து பெண்களும் அறிந்து கொள்ள வேண்டிய இந்த பதிவை அதிகளவில் ஷேர் பண்ணுங்க.


