News October 19, 2025
தீபாவளி.. எந்த நேரத்தில் குளிக்க வேண்டும் தெரியுமா?

ஐப்பசி மாத அமாவாசையில் கொண்டாடப்படும் தீபாவளி என்றாலே எண்ணெய் குளியலும், பூஜையும் தான். அப்படி நாளை எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், பூஜை செய்ய உகந்த நேரம் எது என்ற சந்தேகம் பலருக்கும் எழும். அதிகாலை 4 மணி- 6 மணிக்குள் அல்லது காலை 9.10 மணி முதல் 10.20 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, பூஜை செய்ய உகந்த நேரமாக கூறப்படுகிறது.
Similar News
News October 19, 2025
தீபாவளியில் இந்த தவறுகளை பண்ணாதீங்க!

இருளின் மீது ஒளியும், அறியாமையின் மீது அறிவும் படரும் பண்டிகையே தீபாவளி. அன்று இந்த தவறுகளை செய்யக் கூடாது: *வீட்டில் எந்த இடத்திலும் இருள் சூழக் கூடாது *தீபாவளிக்கு அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடித்து முதியவர்கள், உடல்நலம் பாதித்தவர்களையும் தொந்தரவு செய்ய வேண்டாம் *அதேபோல் எந்த விலங்கையும், குறிப்பாக பட்டாசு சத்தத்தால் பயப்படும் விலங்குகளை துன்புறுத்தக்கூடாது.
News October 19, 2025
ரஜினி வழியில் விஜய்?

நான் தான் ஹீரோ என நானே கூறிக்கொண்டே இருக்கக்கூடாது, என்னை பற்றி பிறர் பேசினாலே நான் ஹீரோ என ரஜினி கூறியிருப்பார். விஜய் வீட்டுக்குள்ளேயே உள்ள நிலையில், அவரை பற்றி அரசியல் தலைவர்கள், கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வரை அனைவரும் பேசுகின்றனர். சினிமாவில் ஹீரோவாக ஜொலிப்பதை போலவே, அரசியலிலும் அவ்வப்போது வெளியே வந்தால் போதும் ஜெயித்துவிடலாம் என்பது முடியாத ஒன்று என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News October 19, 2025
தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறையா இவர்கள்?

MGR, சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என வெகுசிலரே ரசிகர்கள் மனதை கவர்ந்ததோடு, வணிக ரீதியாகவும் வெற்றி நாயகர்களாக கருதப்படுகிறார்கள். இந்த வரிசையில், தமிழ் சினிமாவில் தற்போது மணிகண்டன், கவின், ப்ரதீப் ரங்கநாதன், ஹரீஷ் கல்யாண், அசோக் செல்வன், துருவ் விக்ரம் ஆகியோர் களமிறங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் யார் தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறையாக மாறுவார்கள்?