News March 26, 2024
தோனி, ஜடேஜா வரிசையில் இணைந்த தினேஷ் கார்த்திக்

பஞ்சாபிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், தினேஷ் கார்த்திக் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். 10 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என மொத்தமாக 28* ரன்கள் குவித்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் ஐபிஎல்லில் வெற்றிகரமான சேஸிங்கில் அவுட்டாகாத வீரர்கள் வரிசையில், தினேஷ் கார்த்தி (23 முறை) 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் 2 இடங்களில் தோனியும், ஜடேஜாவும் (தலா 27 முறை) உள்ளனர்.
Similar News
News August 14, 2025
திருச்சி: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, கடலூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9843072080) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News August 14, 2025
தெருநாய்கள் விவகாரம்: SC குற்றச்சாட்டு

அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லையால், டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் காப்பகத்துக்கு மாற்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இதற்கு தடை கோரி பல்வேறு விலங்கு நல அமைப்புகள் SC-ல் மனுத்தாக்கல் செய்தன. இதன் விசாரணையின்போது, தெருநாய்களுக்கான கட்டுப்பாட்டு விதிகளை உள்ளாட்சி அதிகாரிகள் சரிவர பின்பற்றவில்லை என கோர்ட் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பான விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
News August 14, 2025
திமுக அரசுக்கு எதிரான வழக்கு: மீண்டும் அபராதம்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட் ₹1 லட்சம் அபராதத்தையும் விதித்துள்ளது. வழக்கறிஞர் சத்தியகுமார் தாக்கல் செய்த இந்த வழக்கை வாபஸ் பெறவும், ஐகோர்ட் அனுமதி மறுத்தது. ஏற்கெனவே <<17319854>>இதேபோன்ற வழக்கில்<<>> SC விதித்த ₹10 லட்சம் அபராதத்தை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கோர்ட்டில் செலுத்தியுள்ளார்.