News March 26, 2024

தோனி, ஜடேஜா வரிசையில் இணைந்த தினேஷ் கார்த்திக்

image

பஞ்சாபிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், தினேஷ் கார்த்திக் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். 10 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என மொத்தமாக 28* ரன்கள் குவித்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் ஐபிஎல்லில் வெற்றிகரமான சேஸிங்கில் அவுட்டாகாத வீரர்கள் வரிசையில், தினேஷ் கார்த்தி (23 முறை) 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் 2 இடங்களில் தோனியும், ஜடேஜாவும் (தலா 27 முறை) உள்ளனர்.

Similar News

News November 12, 2025

உங்களுக்கு மாரடைப்பு வருமா? 2 நிமிடங்களில் அறிய முடியும்

image

இளம் வயதினரும் மாரடைப்பால் மரணிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாரடைப்பு வருவதை முன்னதாகவே அறிய CT Calcium Scoring என்ற வசதியை அரசு அறிமுகம் செய்துள்ளது. சென்னை ஓமந்தூரார் GH-ல் ₹500 செலுத்தி 2 நிமிடங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த மெஷின் எப்படி செயல்படுகிறது, டெஸ்ட் எடுப்பதற்கு முன்பு நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க. SHARE IT.

News November 12, 2025

ஏற்றத்துடன் முடிந்த சந்தைகள்.. யார் யாருக்கு லாபம்?

image

பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 595 புள்ளிகள் உயர்ந்து 84,466 புள்ளிகளிலும், நிஃப்டி 177 புள்ளிகள் உயர்ந்து 25,872 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. Asian Paints, HDFC Life, TCS, Tech Mahindra நிறுவனங்களின் பங்குகள் 3 – 5% உயர்ந்ததால் அதில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. நீங்கள் வாங்கிய பங்குகள் உங்களுக்கு லாபம் தந்ததா?

News November 12, 2025

‘கும்கி 2’ படத்தை வெளியிட ஹைகோர்ட் தடை

image

பிரபுசாலமன் இயக்கிய ‘கும்கி 2’ படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருந்தது. இதனிடையே, படத்தை தயாரிக்க பிரபுசாலமன் வாங்கிய ₹1.5 கோடி கடனை தராததால் படத்திற்கு தடை கோரி சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை HC ‘கும்கி 2’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் நாளை மறுநாள் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

error: Content is protected !!