News August 7, 2024
ஈரோடு திமுக நிர்வாகிகளை புறக்கணித்தாரா உதயநிதி?

ஈரோடு திமுக நிர்வாகிகளை சந்திக்காமல் உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடுக்கு அண்மையில் வந்த உதயநிதியை வரவேற்க திமுகவினர் கடந்த 1ஆம் தேதி இரவு கருமாண்டம்பாளையம் பகுதியில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களை சந்திக்காமல் உதயநிதி சென்று விட்டதாகவும், இதேபோல் 2ஆம் தேதி கெஸ்ட் அவுசிற்கு வந்த நிர்வாகிகளையும் சந்திக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
Similar News
News November 21, 2025
தஞ்சை: கொட்டி கிடக்கும் அரசு வேலை!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 5810 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 27.11.2025
4. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 21, 2025
BREAKING: புதிய கட்சி தொடங்கும் ராமதாஸ்!

பாமகவை சட்ட ரீதியாக கைப்பற்றும் பணிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், தனது ஆதரவாளர் ஒருவர் பெயரில் அய்யா பாட்டாளி மக்கள் கட்சி(APMK) தொடங்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். இதற்காக எந்த கட்சியிலும் இல்லாத 100 பேரிடம் பிரமாணப்பத்திரம் வாங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 2026 பேரவைத் தேர்தலில் மாம்பழம் சின்னம் தனது தரப்புக்கு கிடைக்காவிட்டால் பொது சின்னத்தை பெற இத்திட்டம் எனக் கூறப்படுகிறது.
News November 21, 2025
இளையராஜா போட்டோக்களை பயன்படுத்த தடை

இளையராஜாவின் புகைப்படங்களை SM-ல் பயன்படுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்கள் மற்றும் மியூசிக் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனது பெயர், புகைப்படம், இசைஞானி என்ற பட்டம் என எதையும் பயன்படுத்தக்கூடாது என்ற இளையராஜாவின் முறையீடு ஏற்கப்பட்டுள்ளது.


