News March 22, 2024
2024 ஐபிஎல்லுக்கு பிறகு தோனி ஓய்வு?

2024 ஐபிஎல்லுக்கு பிறகு தோனி ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்வதேச கிரிக்கெட்டில் 2020ல் ஓய்வு பெற்ற போதும், ஐபிஎல்லில் தோனி விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணிக்கு தலைமை தாங்கி 5 முறை கோப்பையும் வென்று தந்துள்ளார். 2024 ஐபிஎல்லுக்கு பிறகு அவர் ஓய்வு பெற இருப்பதாகவும், இதனால் தான் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Similar News
News December 27, 2025
இரு சித்தாந்தத்திற்கு இடையேதான் போட்டி: சீமான்

2026 தேர்தலில் நாதக தோல்வியடைந்தால் அது மக்களின் தோல்வி என சீமான் தெரிவித்துள்ளார். சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற நாதகவின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், திராவிட சித்தாந்தத்துக்கும், தமிழ் தேசிய கருத்தியிலுக்கும் இடையேதான் தேர்தலில் போட்டி என கூறியுள்ளார். அரசு கொடுக்கும் இலவசங்கள் மக்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும், தற்சார்பே தங்கள் பொருளாதார கொள்கை என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 27, 2025
என்றும் தளபதி ரசிகையே: மாளவிகா மோகனன்

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களைப் போலவே தானும் ஒரு ரசிகையாக விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பதாக நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார். விஜய் சாருடன் பணியாற்றியது மிகப்பெரிய பெருமை. அவரை ஒரு நண்பர் என அழைப்பது அதைவிடப் பெரிய பெருமை எனத் தெரிவித்துள்ளார். ஜனநாயகன் படத்துடன் பொங்கலுக்கு ரிலீசாகும் பிரபாஸின் ’ராஜாசாப்’ படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
News December 27, 2025
FLASH: தங்கம் விலை தடாலடியாக மாறியது

தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இன்றுடன் இந்த வார வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1.04 லட்சமாக உள்ளது. இது கடந்த வாரத்தைவிட ₹4,800 அதிகமாகும். கடந்த சனிக்கிழமை 1 சவரன் ₹99,200-க்கு விற்பனையாகி இருந்தது. இதுஒருபுறம் இருக்க, வெள்ளி விலை ஒரே வாரத்தில் கிலோவுக்கு ₹48,000 அதிகரித்து, ₹2.74 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை விலை எப்படி இருக்குமோ?


