News December 6, 2024

ஆர்டர் செய்த 30 நிமிடங்களில் டெலிவரி! Myntra அறிவிப்பு

image

மிந்த்ரா M-Now என்ற புதிய quick commerce சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. M-Nowவில் ஆர்டர் செய்தால் 30 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறது. நேற்று பெங்களூருவில் குறிப்பிட்ட இடங்களில் சேவையை தொடங்கிய மிந்த்ரா விரைவில் மற்ற மெட்ரோ நகரங்களான மும்பை, சென்னை போன்ற இடங்களிலும் சேவையை வழங்க உள்ளது. இதன்மூலம் zepto, blinkit போன்ற நிறுவனங்களுக்கு Myntra கடும் போட்டியாக இருக்கும்.

Similar News

News July 8, 2025

கடலூர் கோர விபத்து: இபிஎஸ் இரங்கல்

image

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் <<16987572>>பள்ளி வேன் மீது ரயில்<<>> மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என இறைவனை வேண்டுவதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

News July 8, 2025

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்

image

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பது மட்டுமல்லாமல், அவர்கள் அழைப்பும் விடுத்துள்ளனர். ஆனால், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்கவில்லை. இருப்பினும் பஸ்கள், ஆட்டோக்கள் சேவையில் பாதிப்பு இருக்கும் என தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

News July 8, 2025

சாதி பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய ரஷ்மிகா

image

கொடவா சமூகத்தில் இருந்து திரைத்துறையில் நுழைந்த முதல் நடிகை தான் தான் என்று ரஷ்மிகா மந்தனா கூறியது சர்ச்சையாகியுள்ளது. ஏனென்றால், இச்சமூகத்தில் இருந்து பிரேமா, தஸ்வினி, கரும்பையா, ரீஷ்மா, ஸ்வேதா, வர்ஷா பொல்லம்மா, ஹரிசிகா பூனாச்சா, சுப்ரா அய்யப்பா ஆகியோர் திரைக்கு வந்துள்ளனர். இதனால், ரஷ்மிகாவின் கருத்துக்கு அச்சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!