News March 29, 2024
மார்ச் மாதத்துடன் இவற்றிற்கு காலக்கெடு முடிவு!

வரி செலுத்துதல், முதலீட்டு திட்டங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பது, மற்றும் அப்டேட் செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31இல் முடிவடைகிறது. அவை ➫IT ரிட்டர்ன்களை தாக்கல் செய்ய வேண்டும் ➫மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் Re-KYC பூர்த்தி செய்ய வேண்டும். ➫வீட்டுக் கடன்களில் பல வங்கிகள் வழங்கும் சிறப்பு தள்ளுபடிகள் மார்ச் 31 வரை கிடைக்கும். ஏப்ரல் முதல் புதிய விதி அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
Similar News
News December 8, 2025
தொழில் தொடங்க ₹10 லட்சம் தரும் அரசு திட்டம்!

TN பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க பெண்களுக்கு 25% மானியத்துடன் ₹10 லட்சம் கடன் கிடைக்கும். அத்துடன், தொழில் வளர்ச்சிக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படும். இதனை பெற, தொழிலுக்கான மொத்த செலவில் 5% விண்ணப்பதாரரின் பங்களிப்பாக இருக்க வேண்டும். 18 – 55 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். திட்டத்துக்கு அப்ளை பண்ண <
News December 8, 2025
BREAKING: மு.க.அழகிரிக்கு அதிர்ச்சி

கோயில் நிலத்தை அபகரித்த வழக்கில் விடுவிக்க மறுத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மு.க.அழகிரி SC-யில் மேல்முறையீடு செய்தார். இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, அழகிரி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News December 8, 2025
விரைவில் மெகா கூட்டணி அமைக்கப்படும்: அன்புமணி

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக நிச்சயமாக படுதோல்வி அடையும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். விரைவில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று கூறிய அவர், பாமக இருக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என்றார். கட்சி பிரச்னை குறித்த கேள்விக்கு, ‘உள்கட்சி பிரச்னைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம். கட்சிக்காரர்களிடம் அது பற்றி பேசுவேன். மீடியாவிடம் அல்ல’ என்று பதிலளித்தார்.


