News March 18, 2024
கடலூர்: பேருந்து சக்கரத்தில் பாய்ந்து ஒருவர் பலி

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் இன்று(மார்ச்.18) அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சென்னை புறப்பட தயாரான அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் திடீரென பாய்ந்து விழுந்ததில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 6, 2025
கடலூர்: 10th போதும் ரூ.69,100 சம்பளத்தில் வேலை!

கடலூர் மக்களே, மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 455 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு போதுமானது. சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.09.2025 தேதிக்குள் <
News September 6, 2025
குப்பை சேகரிக்கும் வாகனம் கொடியசைத்து துவக்கி வைப்பு

கடலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், காட்டுமன்னார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சிகளுக்கு தேவையான குப்பை சேகரிக்கும் புதிய வாகனங்களை, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனை செல்வன், கடலூர் ஆட்சியர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
News September 6, 2025
வடலூர்: ஐயன் ஏரி புணரமைக்கும் பணி ஆய்வு

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டம், வடலூர் நகராட்சிக்குட்பட்ட ஐயன் ஏரி புணரமைக்கும் பணியினை வடலூர் நகர மன்ற தலைவர் சு.சிவக்குமார் இன்று (செப்.06) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகராட்சி பொறியாளர் சிவசங்கரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.