News March 27, 2025
CSK vs RCB: இவங்க தான் டாப்!

CSK- RCB அணிகள் இதுவரை 33 முறை மோதி உள்ளன. இதில் CSK 21, RCB 11 முறை வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்களில் கோலி (1053) முதலிடத்திலும், தோனி (765) 2ஆம் இடத்திலும், ரெய்னா (616) 3ஆம் இடத்திலும் உள்ளனர். அதேபோல், அதிக விக்கெட்கள் எடுத்தவர்களில் ஜடேஜா 18, பிராவோ 17, அல்பி மார்கல் 15 விக்கெட்களுடன் முதல் 3 இடங்களில் உள்ளனர்.
Similar News
News July 7, 2025
’மகள்களின் சிகிச்சைக்காக அரசு பங்களாவில் உள்ளேன்’

SC முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தான் பதவி வகித்தப் போது வசித்த அரசு பங்களாவை காலி செய்யாமல் உள்ளார் என புகார் எழுந்தது. இந்நிலையில் இதற்கு பதிலளித்த அவர், தனது மகள்களுக்கு நெமலின் மயோபதி எனும் தசை நோய் உள்ளதாகவும், அதற்காக எய்ம்ஸில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக தான் ஏற்கனவே SC நீதிபதிகள், அலுவலர்களிடம் விளக்கமளித்திருப்பதாகவும் கூறினார்.
News July 7, 2025
‘மேகதாது திட்டத்துக்கு 5 நிமிடத்தில் அனுமதி பெறுவேன்’

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தற்போது ஆயத்த பணிகளை துவக்கியுள்ளது. அதைப்போன்று கர்நாடகா பாஜக எம்.பிக்கள், மத்திய அமைச்சர் குமாரசாமி மேகதாது தொடர்பாக எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என காங்., குற்றம் சுமத்தியது. இதற்கு பதிலளித்த குமாரசாமி, தமிழக கூட்டணி கட்சிகளிடம் காங்., சம்மதம் பெற்றால், மேகதாது திட்டத்திற்கு பிரதமரிடம் பேசி 5 நிமிடத்தில் அனுமதி பெற்று தருவேன் என தெரிவித்தார்.
News July 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 389 ▶குறள்: செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. ▶பொருள்: துணையாக இருப்போர் செவிபொறுத்துக் கொள்ள முடியாத சொற்களைச் சொன்னாலும் அவற்றின் நன்மை கருதிப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகம் தங்கி நிற்கும்.