News March 27, 2025

CSK vs RCB: இவங்க தான் டாப்!

image

CSK- RCB அணிகள் இதுவரை 33 முறை மோதி உள்ளன. இதில் CSK 21, RCB 11 முறை வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்களில் கோலி (1053) முதலிடத்திலும், தோனி (765) 2ஆம் இடத்திலும், ரெய்னா (616) 3ஆம் இடத்திலும் உள்ளனர். அதேபோல், அதிக விக்கெட்கள் எடுத்தவர்களில் ஜடேஜா 18, பிராவோ 17, அல்பி மார்கல் 15 விக்கெட்களுடன் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

Similar News

News December 25, 2025

ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்

image

*நான் மெதுவாக நடப்பவன், ஆனால் ஒருபோதும் பின்னோக்கி நடப்பதில்லை.
*உங்களுடைய எதிரிகளை தன்னுடைய எதிரிகளாக நினைப்பவனே உங்கள் நண்பன்.
*வெற்றிகரமான பொய்யராக வருமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான நினைவாற்றல் கிடையாது.
*எதிர்காலம் பற்றிய ஒரு சிறந்த விஷயம் என்னவென்றால், அது ஒரு நாள் வந்தே தீரும் என்பதே.

News December 25, 2025

தமிழக மக்களை இப்படி சொன்னார்கள்: DMK MP

image

தமிழக மக்கள் டிவி சீரியல் பார்த்துக்கிட்டு ஊர் நியாயம் பேசிட்டு இருக்காங்க, அவங்களுக்கு எதுக்கு பணம் கொடுக்கணும்னு பார்லிமெண்ட்ல பாஜககாரங்க பேசுனாங்க என்று சத்தியம் செய்து கூறியுள்ளார், தருமபுரி DMK MP மணி. 100 நாள் வேலை திட்ட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் MP பேசியது தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், திமுகவினர் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

News December 25, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 560 ▶குறள்: ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். ▶பொருள்: ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.

error: Content is protected !!