News September 3, 2025
கூட்ட நெரிசல் விவகாரம்: வாய் திறந்த விராட் கோலி!

கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விராட் கோலி முதல்முறையாக மனம் திறந்துள்ளார். ஜூன் 4-ல் நடந்த சம்பவம் யாரும் எதிர்பார்க்காத ஒன்று எனவும், மிகவும் கொண்டாட்டமான நாளாக இருக்க வேண்டியது, மிகவும் சோகமான நாளாக மாறிவிட்டதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக தினமும் பிரார்த்திக்கிறேன் எனவும் இனி முன்னோக்கி செல்லும் போது பொறுப்புடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 20, 2026
ஈரான் போர்: மத்திய அரசை புகழ்ந்த காங்., MP சசி தரூர்!

ஈரான் போர் விவகாரத்தில் இந்தியாவின் மெளனம் கோழைத்தனம் அல்ல; சிறப்பான ராஜதந்திரம் எனக் காங்கிரஸ் MP சசிதரூர் புகழ்ந்து பேசியுள்ளார். அதேபோல், மத்திய அரசு, விவேகத்துடனும், எச்சரிக்கையுடனும் சிறப்பாக செயல்படுவதாக மற்றொரு MP மணீஷ் திவாரியும் பாராட்டியுள்ளார். ஈரான் விவகாரத்தில் PM மோடி கோழைத்தனமாக செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி விமர்சித்து வரும் நிலையில், அவரது கட்சி MP-க்கள் அரசை புகழ்ந்துள்ளனர்.
News March 20, 2026
உலக தடகள வரலாற்றில் கால்பதிக்கும் இந்தியா

2028 உலக உள்ளரங்க தடகளப் போட்டிகளை நடத்தும் உரிமையை முதல்முறையாக இந்தியா பெற்றுள்ளது. இதற்காக இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிய நிலையில், பலகட்ட ஆய்வுக்கு பிறகு, ஒடிசாவின் புவனேஸ்வர் தேர்வானது. இதன்மூலம் ஜப்பான், கத்தார் & சீனாவை அடுத்து இப்போட்டியை நடத்தும் ஆசியாவின் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உலக உள்ளரங்க தடகள போட்டிகளில் இந்தியா இதுவரை ஒரு பதக்கம் கூட வென்றதில்லை.
News March 20, 2026
என்னப்பா இது விசிலுக்கு வந்த சோதனை..

கோவையில் ECI சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், மாணவிகள் நடனமாடியபோது, ஒரு மாணவி விசில் ஊதினார். உடனடியாக தேர்தல் அதிகாரி ஒருவர் விசிலை மேடையிலேயே பிடுங்கினார். இது தேர்தல் நடவடிக்கையே என அதிகாரிகள் கூறினர். ஆனால், தொடக்கம் முதலே மத்திய, மாநில அரசுகளால் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு இடையூறு ஏற்படுவதாக தவெகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


