News August 21, 2024

செந்தில் பாலாஜி வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், சாட்சி விசாரணையை தொடரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு முடிந்ததால், சாட்சிகளை விசாரிக்கலாம் என முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு அனுமதியளித்து, விசாரணையை ஆக.28க்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.

Similar News

News March 17, 2026

தவெகவுடன் கூட்டணியா? நயினார் மழுப்பல்

image

அதிமுக கூட்டணியில் தவெக இணையவுள்ளதாக வெளியாகும் தகவலே தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். இதனை தவெகவும், EPS-ம் மறுத்துள்ள நிலையில், இதுபற்றி தனக்கு தெரியாது என நயினார் நாகேந்திரன் மழுப்பலாக பதிலளித்துள்ளார். இதனால் NDA உடன் மறைமுக பேச்சுவார்த்தையில் இப்போதும் தவெக உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இதுபற்றி விஜய் கூறினால் மட்டுமே தெளிவு கிடைக்கும் என கூறப்படுகிறது.

News March 17, 2026

தமிழகத்தின் எதிர்காலம் அண்ணாமலை: பவன் கல்யாண்

image

அண்ணாமலையிடம் அபாரமான ஆற்றல் உள்ளது; ஆனால் அந்த ஆற்றல் முழுமையாக பயன்படுத்தப்படாமல், வெளியே கொண்டு வரப்படாமல் இருப்பதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். அண்ணாமலை மிகவும் உறுதியான ஒரு தலைவர், தமிழகத்திற்கு தற்போது தேவைப்படுவதும் இத்தகைய தலைமைதான் எனக் கூறிய அவர், அண்ணாமலை தனது பொறுப்பை சிறப்பாக கையாண்டால் தமிழகத்தின் எதிர்காலமாக திகழ்வார் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 17, 2026

BREAKING: தங்கம் விலை மேலும் சரிவு!

image

தங்கம் விலை இன்று(மார்ச் 17) சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹60 குறைந்து ₹14,650-க்கும், 8 கிராம் கொண்ட சவரன் ₹1,17,200-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவால் இந்திய சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து 6-வது நாளாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!