News March 18, 2024

விருதுநகர் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் போட்டி

image

மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே 10 தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் வெற்றிபெற்றார்.

Similar News

News January 15, 2026

விருதுநகர் மக்களே.. இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>eservices.tn.gov.in <<>>என்ற தளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். SHARE பண்ணுங்க.

News January 15, 2026

அருப்புக்கோட்டை: வைரலான வீடியோவால் போலீசார் அதிரடி

image

அருப்புக்கோட்டை ஸ்ரீசௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நேற்று பொங்கல் கொண்டாட்டத்தை முடித்து கல்லூரி முன்பு இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று பொது மக்களை அச்சுறுத்தினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று டவுன் போலீசார் அந்த மாணவர்களை அழைத்து தக்க அறிவுரை வழங்கி இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து தலா ரூ.11,000 அபராதம் விதித்தனர்.

News January 15, 2026

JUST IN விருதுநகருக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்

image

அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சி பகுதியில் தி.மு.க. தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.‌ இந்நிகழ்ச்சிக்கு இன்னும் சரியான தேதி குறிப்பிடாத நிலையில் நாளை(ஜன.16) பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். பின்னர் இந்நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஏற்பாடுகளை காலை 11 மணியளவில் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!