News August 9, 2024

VHP கூட்டத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி

image

விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) மாநிலக்கூட்டத்தை கள்ளக்குறிச்சியில் நடத்த, நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், 400 பேர் வரை மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமென நிபந்தனை விதித்து, கூட்டத்துக்கு அனுமதி வழங்கியது. முன்னதாக, 1000 பேர் பங்கேற்க அனுமதி கேட்டதால், போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

Similar News

News July 9, 2025

வேலையில்லா இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு 1/2

image

வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், தங்கும் வசதி, உணவு & ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <>இந்த<<>> லிங்கில் விண்ணப்பிக்கலாம். மேலும், தகவலுக்கு (044-22500107, 04151-228802) தொடர்ச்சி

News July 9, 2025

மருமகளுக்கு Get-out.. மகளுக்கு கட்-அவுட்டா?

image

செளமியாவை அரசியலுக்கு வரக்கூடாது என்று நானே கூறியதாக ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்றைய பாமக கூட்டத்தில் அவரது மூத்த மகள் காந்திமதியை மேடையேற்றி அழகு பார்த்தார் மருத்துவர். இதனால் மகளுக்கு ‘Ok’ மருமகளுக்கு ‘No’வா என்று கட்சியினரும், ‘இது வாரிசு அரசியல் இல்லையா’ என திமுகவினரும் கேட்கின்றனர். அதேநேரம், காந்திமதியின் மகன் முகுந்தனின் நுழைவே தந்தை – மகன் இடையே பிரச்னை உருவாக ஒரு காரணம்.

News July 9, 2025

தமிழ்நாடு குறித்து அறியப்படாத ‘6’ முக்கிய தகவல்கள்

image

எண்ணற்ற சிறப்புகளை கொண்ட ‘தமிழ்நாடு’ மாநிலத்தின் பெரிதும் அறிந்திடாத சில தகவல்களை மேலே உள்ள போட்டோக்களில் பாருங்க. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவிற்கு சிறப்பு நமது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டு. மேலே கொடுக்கப்பட்டுள்ளவை கொஞ்சம் தான். இதுபோன்ற நமது மாநிலம் குறித்து உங்களுக்கு தெரிஞ்ச சில அரிய தகவல்களை கமெண்ட் செய்யவும். கெத்தாக சொல்லுங்க தமிழன்டா என!

error: Content is protected !!