News August 9, 2024

VHP கூட்டத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி

image

விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) மாநிலக்கூட்டத்தை கள்ளக்குறிச்சியில் நடத்த, நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், 400 பேர் வரை மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமென நிபந்தனை விதித்து, கூட்டத்துக்கு அனுமதி வழங்கியது. முன்னதாக, 1000 பேர் பங்கேற்க அனுமதி கேட்டதால், போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

Similar News

News October 18, 2025

BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ₹2,000 குறைந்தது. இந்நிலையில், மாலையில் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சவரன் ₹400 அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் 1 கிராம் ₹12,000-க்கும், 1 சவரன் ₹96,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ₹190-க்கு விற்கப்படுகிறது.

News October 18, 2025

இந்த பழங்களை மழை காலத்தில் சாப்பிடாதீங்க!

image

பருவ மழை காலம், மழையை மட்டும் கொண்டு வருவதில்லை. கூடவே பலவித தொற்றுநோய்களையும் கொண்டு வரும். மழைக்கால ஈரப்பதம் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக, சில பழங்களை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படி நீங்கள் சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன என்று மேலே ஸ்வைப் பண்ணி பாருங்க…

News October 18, 2025

அவைக்குறிப்பில் தீபாவளி வாழ்த்து நீக்கம்: வானதி

image

இதுவரை தீபாவளிக்கு வாழ்த்து கூற மறுத்தவர்கள், ‘தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்’ என்று கேட்கக்கூட அனுமதி மறுப்பதாக வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தீபாவளி வாழ்த்து கூறுங்கள் என்று பேசியதை கூட அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளனர் என்றார். இதைவிட பாசிசம் வேறேதும் இருக்க முடியாது என்றும் விமர்சித்தார். திமுக தரப்பில் தீபாவளி வாழ்த்து கூறாதது தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

error: Content is protected !!