News December 31, 2024
அமெரிக்காவில் பெரிய சம்பவத்தை செய்த சீனா

சீன அரசின் நிதியுதவி பெற்ற ATP ஹேக்கர்கள் அமெரிக்க கருவூலத் துறையின் அமைப்புக்குள் நுழைந்து சைபர் தாக்குதலை நடத்தி இருப்பது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிச. 2 அன்று இந்த தாக்குதலின்போது, சில ரகசிய ஆவணங்களை அவர்கள் திருடியுள்ளதாக CIA கண்டறிந்துள்ளது. அமெரிக்க ஏஜென்சி இந்த மீறலை ‘பெரிய சம்பவம்’ நடந்தேறியுள்ளதென விவரித்து அந்நாட்டின் சட்ட அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
Similar News
News July 6, 2025
₹100, ₹200 கோடி அல்ல.. வாயை பிளக்கும் தொகை

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ வரிசையில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கும் ‘ராமாயணா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் இசையமைக்கின்றனர். இரண்டு பாகங்களாக, ₹1600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் இந்திய சினிமாவின் மிக பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News July 6, 2025
மராட்டிய எழுச்சி.. பாஜக மீது ஸ்டாலின் காட்டம்

TN புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்குவோம் என கூறிய பாஜக, தங்கள் ஆட்சியிலுள்ள மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சியை கண்டு பின்வாங்கியுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தித் திணிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த பேரணி எழுச்சி மிகுந்தது என கூறியுள்ளார். உ.பி., ராஜஸ்தானில் 3வது மொழி என்ன? என்ற ராஜ்தாக்கரே கேள்விக்கு பாஜகவிடம் பதில் இருக்காது எனவும் விமர்சித்துள்ளார்.
News July 6, 2025
வரலாற்றில் இன்று

1892 – தாதாபாய் நௌரோஜி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1935 – சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது. 1939 – நாட்சி ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. 2013 – போயிங் 777 விமானம் சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டில் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர், 181 பேர் காயமடைந்தனர்.