News April 5, 2024
சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்

கோடை காலத்தை முன்னிட்டு, சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூரில் இருந்து நாளை (ஏப்.5) 6, 7, 12, 13, 14, 19, 20, 21, 26, 27, 28 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
Similar News
News April 2, 2026
நாகை: தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் கடன்..!

நாகை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. <
News April 2, 2026
டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த KKR

SRH அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற KKR பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் KKR களமிறங்கும் நிலையில், SRH அணியில் ஷிவாங் குமார் இணைந்துள்ளார். முதல் போட்டியில் இரு அணிகளும் தோல்வி அடைந்ததால் முதல் வெற்றிக்காக இன்று கடும் போராட்டம் இருக்கும். கடந்த போட்டியில் இரு அணிகளின் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், பவுலிங்கே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
News April 2, 2026
EPS மீது தனபால் கடும் அதிருப்தி!

அவிநாசி தொகுதிக்காக விருப்பமனு அளித்தும், தேர்தலில் போட்டியிட விருப்பமா என யாருமே கேட்கவில்லை என தனபால் வேதனை தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர், ஜெ., மறைவுக்கு பிறகு ஆட்சிக்கு எதிராக 18 MLA-க்கள் போர்க்கொடி தூக்கினர். அப்போது சபாநாயகர் பொறுப்பில் இருந்த நான்தான், அவர்களை டிஸ்மிஸ் செய்து ஆட்சியை காப்பாற்றி கொடுத்தேன். ஆனாலும் தற்போது கட்சிக்குள் எனக்கு மரியாதை இல்லை என கூறியுள்ளார்.


