News May 1, 2024
தேவைப்பட்டால் காவல்துறை உத்தரவில் மாற்றம்

தனி நபர்கள் வாகனத்தில் போலீஸ், ஊடகம் போன்ற ஸ்டிக்கர்களை பயன்படுத்த சமீபத்தில் போலீசார் தடை விதித்தனர். இதற்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குற்றவாளிகள் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. தேவைப்பட்டால் அறிவிப்பில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News November 16, 2025
PAK-ல் இருந்து டிரோன் வழியாக வெடிபொருள்கள் கடத்தல்

பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் வழியாக வெடிபொருட்கள், போதை மருந்துகள் கடத்தப்படுவதை NIA கண்டுபிடித்துள்ளது. இதற்கு மூளையாக செயல்பட்ட விஷால் பிரச்சார் என்ற நபர் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் எல்லையில் இருந்து டிரோன் வழியாக வரும் ஆயுதங்கள், போதைப்பொருள்கள் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.
News November 16, 2025
‘Where is my Train’ ஆப் உருவாக்கியவர் இவர்தான்!

ஒரு காலத்தில், ரயில் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் ஸ்டேஷனில் மணிக்கணக்கில் காத்திருப்போம். ஆனால் ‘Where is my Train’ செயலி மூலம் அந்த சிக்கல் இப்போது இல்லை. அகமது நிஜாம் மொஹைடின் என்பவர் ‘Sigmoid Labs’ என்ற நிறுவனத்திற்காக உருவாக்கிய இந்த செயலியை, கூகுள் 2018-ல் கையகப்படுத்தியது. ஒரு எளிய சிக்கலைத் தீர்த்ததன் மூலம் இந்நிறுவனத்தின் மதிப்பு ₹320 கோடியைத் தாண்டியுள்ளது.
News November 16, 2025
ராகுல் காந்தியின் தோல்வி வழியில் விஜய்: அண்ணாமலை

எதிர்ப்பு அரசியலை மட்டும் பார்த்து மக்கள் ஓட்டுப் போடுவதில்லை என தவெகவுக்கு அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே ஒவ்வொன்றையும் தவெக செய்வதாகவும், ECI நடத்தும் SIR-ஐ பாஜகவுடன் இணைத்து அதையும் எதிர்ப்பதாகவும் சாடியுள்ளார். விஜய் செய்வதைதான், ராகுல் காந்தி செய்து 95 தேர்தல்களில் தோல்வியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


