News April 3, 2025
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, சேலம், தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.3) முதல் வரும் 5-ஆம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News January 6, 2026
விரைவில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல்?

எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதுபோல, 30 நாள்கள் சிறையில் இருந்தால் CM-ன் பதவியை பறிக்கும் மசோதாவும் தாக்கலாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தொடர் ஜன.31-ல் தொடங்கும் நிலையில், முதல்முறையாக ஞாயிறன்று(பிப்.1) பட்ஜெட் தாக்கலாகும் என கூறப்படுகிறது. இதுபற்றி அபிஷியல் தகவல் வெளியாகவில்லை.
News January 6, 2026
₹2,000 நோட்டுகள்.. RBI முக்கிய தகவல்

புழக்கத்தில் இருந்த ₹2,000 நோட்டுகளில் 98.41% மீண்டும் வங்கிகளுக்கு திரும்பிவிட்டதாக RBI தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ₹5,669 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் மக்களிடம் உள்ளன. உங்களிடம் ₹2,000 நோட்டுகள் இருந்தால், அவற்றை RBI-ன் கிளை அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். 2023 மே மாதத்தில் இருந்து ₹2,000 நோட்டுகளின் புழக்கத்தை RBI நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
News January 6, 2026
பொங்கல் விடுமுறை.. ஜன.9 முதல் சிறப்பு பஸ்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளியூரில் இருப்போர் சிரமமின்றி சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஜன.9 – 14 வரையிலான 6 நாள்களில், வழக்கமாக இயக்கப்படும் (2,092) பஸ்களை விட கூடுதல் எண்ணிக்கையில் (22,797) சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சொந்த ஊர் செல்வோர் இங்கே <


