News September 13, 2024

சான்றிதழ் செல்லுபடியாகும்: பள்ளிக் கல்வித்துறை

image

தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம் வாயிலாக பெறப்பட்ட 10, 12ம் வகுப்பு சான்றிதழானது, தமிழக பாடத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு இணையானது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பதவி உயர்வு, பணி நியமனத்திற்கு இச்சான்றிதழ் தகுதியானது என்றும் தெரிவித்துள்ளது. பள்ளி படிப்பை இடையில் நிறுத்தியவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் மத்திய அரசால் இப்பள்ளி நிறுவனம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News July 8, 2025

டெஸ்ட் கிரிக்கெட்டில் கில் படையின் மாபெரும் சாதனை!

image

இந்திய அணி 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது. ரன்களின் அடிப்படையில் வெளிநாட்டில் நடைபெறும் டெஸ்ட் மேட்ச்சில் இந்திய அணி பதிவு செய்த மிகப்பெரிய வெற்றி(336 ரன்கள் வித்தியாசத்தில்) இதுவே. இந்த பட்டியலில் 2-வது இடத்தில் 318 ரன்கள் (vs வெஸ்ட் இண்டீஸ், 2019), 3-வது இடத்தில் 304 ரன்கள் (vs இலங்கை, 2017) ஆகிய வெற்றிகள் உள்ளன.

News July 8, 2025

பிரபல நடிகர் டேவிட் கில்லிக் மரணம்!

image

பிரபல ஹாலிவுட் நடிகர் டேவிட் கில்லிக்(87) காலமானார். வயது மூப்பின் காரணமாக இவர் லண்டனில் உள்ள ஹாஸ்பிடலில் மரணமடைந்துள்ளார். கிட்டத்தட்ட 6 தசாப்தங்களாக நடித்து வரும் இவர், அண்மையில் ரசிகர்களை ஈர்த்த ‘The Crown’ வெப்தொடர், ‘In A Touch of Frost’, ‘A Bridge Too Far’ போன்ற மெகா ஹிட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News July 8, 2025

BREAKING: CM ஸ்டாலின் – திருமாவளவன் சந்திப்பு!

image

அண்ணா அறிவாலயத்தில் CM ஸ்டாலினை, திருமாவளவன் சந்தித்து பேசினார். ஏற்கெனவே கூட்டணியில் உள்ள வைகோ கடந்த வாரம் சந்தித்து பேசியிருந்த நிலையில், இன்று திருமாவளவன் சந்தித்துள்ளார். 2026 தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், CM ஸ்டாலின் அடுத்தடுத்து கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். வரும் நாள்களில் கம்யூனிஸ்ட் மற்றும் மற்றக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!