News October 24, 2024
மத்திய அரசு வேலை.. உடனே விண்ணப்பிங்க

மத்திய அரசின் GRSEL நிறுவனத்தில் 236 காலி இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. Trade அப்ரன்டிஸ், Graduate அப்ரன்டிஸ், Technician அப்ரன்டிஸ், HR Trainee ஆகிய பதவிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. வேலை, தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட கூடுதல் தகவலை www.grse.in இணையதளத்தில் காணலாம். வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற நவம்பர் மாதம் 17ம் தேதி கடைசி நாள் ஆகும். SHARE IT
Similar News
News December 4, 2025
கடலூர்: அரசு பஸ் மோதி வாலிபர் துடிதுடித்து பலி

விருத்தாசலம் அடுத்த சித்தலூரை சேர்ந்தவர் குமார் மகன் நமச்சிவாயம் (22). இசைக் கலைஞரான இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று நமச்சிவாயம் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 4, 2025
Business 360°: சேவைத்துறை வளர்ச்சி அதிகரிப்பு

*கடந்த நவம்பரில், நாட்டின் சேவைத்துறை 59.8 புள்ளிகளை பெற்று வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தகவல் *பூஷான் பவர்ஸ் நிறுவனத்தில் ஜப்பானின் ஜே.எப்.இ ஸ்டீல்ஸ் நிறுவனம் ₹15,750 கோடி முதலீடு *இந்தியாவில் 5 லட்சம் கார்களை விற்றுள்ளதாக ஸ்கோடா அறிவிப்பு *ரிலையன்ஸின் எண்ணெய் நிறுவனமான நயாரா, கடந்த நவம்பரில் கச்சா எண்ணெய் இறக்குமதியை இரட்டிப்பாக்கியுள்ளது.
News December 4, 2025
சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தார்

2026 தேர்தல் வரவிருப்பதால், திமுகவும், அதிமுகவும் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி – எஸ்.பி.வேலுமணி இடையே மாற்றுக்கட்சியினரை இணைப்பதற்கான போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில், தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆர்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் எஸ்.பி வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.


