News April 6, 2024
கூட்டாட்சி தத்துவப்படி காவிரி நீர் பங்கை வழங்க வேண்டும்

தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது மிகவும் கண்டிக்கதக்கது என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கர்நாடகா அணையில் தண்ணீர் இருக்கிறது. ஆனால், கொடுக்க மனது தான் இல்லை. 2 மாநிலத்திற்கும் தண்ணீர் தேவைதான். அதே நேரத்தில் தமிழக மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான தண்ணீரை தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 6, 2026
BREAKING: இரவில் அதிமுக கூட்டணியில் இணைந்தார்

தேர்தல் நெருங்கும் நிலையில் சிறு அமைப்புகளும், சங்கங்களும் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை கட்சிகளிடம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அகில இந்திய சித்த வைத்தியர்கள் சங்கத்தின் நிறுவனப் பொ.செ., மருத்துவர் G. கருணாமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் EPS-ஐ நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறினர். அத்துடன், அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் எனவும் உறுதியளித்தனர்.
News March 6, 2026
விஜய்க்காக காத்திருக்கிறாரா EPS?

20+ கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியை CM ஸ்டாலின் அமைத்துள்ளதால், தங்களது கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என EPS எண்ணுகிறாராம். இந்நிலையில், தனித்து போட்டியிட்டால் தேர்தல் நேரத்தில் திமுகவின் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது என விஜய்க்கு அதிமுக தலைவர்கள் மூலம் EPS தூது அனுப்பியதாக கூறப்படுகிறது. எனினும், அதிமுகவுடனான கூட்டணி குறித்து விஜய் நிறைய யோசிப்பதால், அவரது முடிவுக்காக EPS காத்திருக்கிறாராம்.
News March 6, 2026
இன்று சனிப்பெயர்ச்சி.. இதெல்லாம் செய்யாதீங்க!

இன்று காலை 8.26 மணிக்கு சனிபகவான், கும்பத்தில் இருந்து மீனத்திற்கு செல்கிறார். எனவே, சனிப்பெயர்ச்சி நாளில் செய்யக்கூடாதவை பற்றிய விவரம் *கருப்பு நிற ஆடைகளை அணியக் கூடாது *பகல் நேரத்தில் தூங்கக்கூடாது *அசைவத்தை தவிர்க்கவும் *பிறரிடம் இருந்து கடன் வாங்குவது, நகையை அடமானம் வைக்க கூடாது *யாரிடமும் எந்தவித வாக்குவாதத்திலும் ஈடுபடக் கூடாது *நெகட்டிவான வார்த்தைகளை பேசக் கூடாது


