India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு அக்.28முதல் நவ.2 வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறிச்சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
செங்கோட்டை – சென்னை எழும்பூர் நோக்கி செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 6:30 மணி அளவில் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டது. இரவு 7:15 மணி அளவில் கடையநல்லூர் அருகே வந்த போது தண்டவாளத்தில் கல் இருந்தது தெரியவந்தது. கடையநல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே கல் இருந்ததால், லோகோ பைலட் ரயிலை நிறுத்தி கல்லை அப்புறப்படுத்தி விட்டு அதன்பின் ரயிலை ஓட்டிச் சென்றார்
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து குழந்தைகள், முதியோர், மன வளர்ச்சி குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் முறையான சட்ட விதிகளின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும். சட்ட விரோதமாக செயல்படும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகாசி என்றாலே எல்லோருக்கும் தெரிந்தது பட்டாசு நகரம் என்று. நேற்று உலகம் முழுவதும் தீபாவளியை மக்கள் சிவகாசி பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். பட்டாசு வெடிக்கும்போது கிடைக்கும் உற்சாகம் வேறு எங்கும் காண முடியாது. ஆனால், பட்டாசு தயாரிப்பவர்களின் தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்கும், அவர்களின் வாழ்வியல் எப்படி இருக்கும் என ஒரு நாளாவது சிந்தித்திருக்கிறீர்களா.? சிந்தித்ததை கமெண்ட் பண்ணுங்க.!
விருதுநகர் மாவட்டத்தில் நாளை (நவ.2) மின்தடை ஏற்படும் இடங்கள்: ராஜபாளையம் தாலுகா அலுவலகம், பஞ்சு மார்க்கெட், முடங்கியார் ரோடு, சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கம்பட்டி, அட்டைமில் முக்கு ரோடு,
கீழராஜகுல ராமன், அழகாபுரி, ஆப்பனூர், சேத்தூர், தேவதானம், தளவாய்புரம், முகவூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம் வடமலாபுரம், ஜமீன் கொல்லங் கொண்டான் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை.
சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் நாடு முழுவதும் ரூ.6000 கோடிக்கு விற்பனையானதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் ரவிதுரை தகவல் தெரிவித்துள்ளார். மழை உள்ளிட்ட காரணங்களால் 75% மட்டுமே பட்டாசு உற்பத்தி நடைபெற்றதாக தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தை ரூ.75.85 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.30) ஒப்புதல் அளித்துள்ளார். இத்திட்டம் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 36,000 மக்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில், ஆண்டாள் கோயிலில் 17 இடங்களில் இருந்த உண்டியல்களை கோயில் மைய மண்டபத்திற்கு கொண்டு வந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டது. அதில் ரூ.11,01,695 காணிக்கை வசூலாகியுள்ளது.
வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள்(48). இவரது கணவர் குருசாமி உயிரிழந்த நிலையில் தாய் லட்சுமி(89) உடன் வசித்து வந்தார். இவருக்கு மலைக்கனி என்பவரிடம் பழக்கம் இருந்துள்ளது. இதையறிந்த லட்சுமி மகள் மாரியம்மாளுடன் இருந்த உறவை துண்டிக்குமாறு மலைக்கனியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மலைக்கனி லட்சுமியை கொலை செய்தார். வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிந்து மலைக்கனியை கைது செய்தனர்.
விருதுநகர் அருகே சூலக்கரை சிட்கோவில் உள்ள தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் சிவராஜா என்பவர் 2019 ஜூலை முதல் 2024 ஜூலை வரை வேலை செய்துள்ளார். அப்போது வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் போலி கையெழுத்திட்டு ரூ.3.82 லட்சம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக மண்டல மேலாளர் ஆண்டனி ஸ்டீபன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவராஜாவை சூலக்கரை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.