Virudunagar

News December 1, 2024

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் போட்டிகள்

image

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வருகின்ற ஒன்பதாம் தேதி ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட நூலக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலையிலும் கல்லூரி மாணவர்களுக்கு மதியமும் இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. எனவே மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 1, 2024

ஸ்ரீவி.,யில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

image

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவிற்கு பிறகு புலிகள் காப்பக பகுதியான விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் மலையாடிவார பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.சில நாட்களாக பந்தபாறை, ரெங்கர் கோயில், ரெங்கர் தீர்த்தம் பகுதிகளில் நடமாடிய யானைகள் 2 நாட்களாக மேல தொட்டியபட்டி குடியிருப்பு பகுதி வரை வந்துள்ளன.இதனை அடர்ந்த வனப் பகுதிகுள் விரட்டி அடித்தால் மட்டுமே பயிர்களை காக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

News November 30, 2024

இப்படி ஒரு காவல் நிலையமா என வியப்படைந்த எஸ்.பி

image

காரியாபட்டி காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆய்வு செய்தார். அதில் காவல் நிலையத்தில் மரக்கன்று நட்டு வைத்து அங்கு சுற்றுப்புற சுவர்களில் எழுதப்பட்டுள்ள விழிப்புணர்வு வாசகங்கள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு வாசகங்கள், தத்துவங்கள் ஆகியவற்றைக் கண்டு வியப்படைந்தார். பின்னர் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் வழக்கு பதிவேடுகள், குற்ற பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

News November 30, 2024

ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் மீது வழக்கு

image

சிவகாசி வேலாயுத ரஸ்தா சாலையில் உள்ள தனியார் லாரி ட்ரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் கருகி உயிரிழந்த நிலையில் மற்றொருவர் காயமடைந்தார். இந்த விபத்து குறித்து ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் மன்குண்டாம்பட்டியை சேர்ந்த முருகேசன் மீது அஜாக்கரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News November 30, 2024

காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், நல வாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருந்தாளுநர், துணை சுகாதார செவிலியர், இயன்முறை மருத்துவர், நுண்கதிர் வீச்சாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் http://virudhunagar.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

விருதுநகரில் தென்னக ரயில்வே மேலாளர் ஆய்வு

image

விருதுநகரிலிருந்து தென்னக ரயில்வே மேலாளர் ஆர்.சிங்கின் ஆய்வு செய்தார். சென்னையில் இருந்து இரவு 8.40 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் இல் புறப்பட்ட தென்னக ரயில்வே மேலாளர் அதிகாலை 4.50 மணிக்கு விருதுநகர் ரயில்வே நிலையத்திற்கு வந்தடைந்தார். இங்கு ரூ.25 கோடியில் மூன்று கட்டங்களாக நடந்து வரும் புதுப்பிக்கும் கட்டுமான பணிகள், வாகன நிறுத்த வசதிகளை பார்வையிட்டார். பின்னர் மற்றொரு ரயிலில் சிவகங்கை புறப்பட்டார்.

News November 30, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனிவர் ஜெயசீலன் இன்று(நவ.30) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் 30 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்கு வராமல் உள்ள 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் 534 இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து சிறப்பு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பள்ளி படிப்பை தொடர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

News November 30, 2024

கிருதுமாலில் தண்ணீர் திறந்து விட அரசாணை வெளியீடு

image

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் கிருதுமால் ஆற்றிற்கு விவசாயம் பாசனம் செய்வதற்காக வைகையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழ்நாடு நிதி அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், வைகை அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு டிசம்பர் 1  முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் 450 மில்லியன் தண்ணீர் திறந்து விட அரசாணை வெளியிடப்பட்டது.

News November 30, 2024

தீ விபத்து குறித்து மேயர் ஆய்வு

image

சிவகாசி வேலாயுத ரஸ்தா சாலையில் இன்று மாலை தனியார் ட்ரான்ஸ்போர்ட் ஒன்றில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு பண்டல்களை இறக்கி வைக்கும் போது ஏற்பட்ட விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார். விபத்து தொடர்பாக விபத்து நேர்ந்த இடத்தில் மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி நேரில் ஆய்வு நடத்தி விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

News November 29, 2024

7 சட்டமன்ற தொகுதிகளில் 47,392 மனுக்கள் பெறப்பட்டன

image

விருதுநகர் மாவட்டத்தில் 4 நாட்களாக மொத்தம் 1907 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் மொத்தம் 47,392 மனுக்கள் பெறப்பட்டன. குறிப்பாக மாவட்டத்தில் பெயர் சேர்த்தல் 29, 744 மனுக்களும், பெயர் நீக்குதலுக்கு 2,784 மனுக்களும், திருத்தம் செய்வதற்கு 14,833 மனுக்களும், ஆதார் அங்கீகாரம் செய்வதற்கு 31 மனுக்களும் என மொத்தம் 47,392 மனுக்கள் பெறப்பட்டன.

error: Content is protected !!