Virudunagar

News December 4, 2024

தொழிலாளர்களின் விவரங்களை கட்டாயம் பதிவேற்ற வேண்டும் 

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் வெளி மாநில தொழிலாளர்களை பணி அமர்த்தும் நிறுவனங்கள் அவர்களின் வாக்காளர் அட்டை தொடர்பு எண் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு பணியமர்த்த வேண்டும். மேலும் தங்களிடம் பணி புரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை labour.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது.

News December 4, 2024

EXCLUSIVE விருதுநகரில் 8124 பேர் வேலையிழப்பு

image

விருதுநகர் தொழிலப் பாதுகாப்பு அலுவலக ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 530 பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 16,642 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு 2020 முதல் 2024 அக்டோபர் வரை 3942 பாட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் விதிமீறல் காரணமாக 171 தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையில் இதில் பணியாற்றிய 8124 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இத்தகவல்கள் அனைத்து RTI மூலம் பெறப்பட்டவை.

News December 4, 2024

கூலித் தொழிலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது

image

ஸ்ரீவி சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(45). கூலி தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள தெருவில் நவ.28 ஆம் தேதி படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் (56) என்பவரை கைது செய்து அவரது வீட்டில் இருந்து ரூ.12 லட்சத்தை கைப்பற்றினர்.

News December 3, 2024

சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்

image

நாளை மறுநாள் (டிச. 5) கார்த்திகை மாத சுப முகூர்த்த தினம் என்பதால் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய பத்திரப்பதிவு துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100க்கு பதில் 150 டோக்கன், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200 க்கு பதில் 300 டோக்கன்களும் தட்கல் டோக்கன் 12க்கு பதில் 16 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News December 3, 2024

ஜூடோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

image

விருதுநகர் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான ஜூடோ போட்டி சிவகாசி ஜேசிஐ பள்ளியில் நடைபெற்றது. இதில் ஸ்ரீவி சிஎம்எஸ் பள்ளி மாணவர்கள் 13 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 5 தங்கம், 2 வெள்ளி உட்பட்ட 11 பேர் பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் டேவிட் முத்துக்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் பொன்பிரபாகரன், தலைமையாசிரியர் சாம்ஜெயராஜ் ஆகியோர் பாராட்டினர்.

News December 3, 2024

குளம் தோண்டிய போது தென்பட்ட பானை ஓடுகள் 

image

வத்திராயிருப்பு அருகே மூவரைவென்றான் பகுதியில் உள்ள மலையில் மலைக் கொழுந்தீஸ்வர் கோயில் உள்ளது.கோயில் மலை அடிவாரத்தில் மூவரை வென்றான் ஊராட்சி சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் குளம் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது 2 அடி ஆழத்தில் மண் பானை ஓடுகள் மற்றும் எலும்புகள் தென்பட்டுள்ளது. இதுகுறித்து வத்திராயிருப்பு வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு விசாரணை நடத்தினர்

News December 2, 2024

மாவட்டத்தில் இதுவரை 55.39 டன் நெகிழி பொருட்கள் பறிமுதல்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று(டிச.02) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை விற்பனை & சேமித்து வைக்கும் வணிக நிறுவனங்களை தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் தற்போது வரை 55.39 டன் நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.39.98 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 2, 2024

விருதுநகர்: சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!

image

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மற்றும் மலைப்பகுதியை ஒட்டியுள்ள சுற்றுலா பகுதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என அறிவுறத்தப்பட்டுள்ளது.

News December 2, 2024

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவர் கைது 

image

ஏழாயிரம்பண்ணை அருகே எலுமிச்சங்காய்பட்டியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குடியிருப்பு பகுதிக்கு அருகில் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு தயாரிப்பது தெரிய வந்தது. இதையடுத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த முருகன்(45) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து பேன்சி ரக பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

News December 1, 2024

ஆசிரியர் கொலையில் வெளியான அதிர்ச்சி தகவல்

image

ராஜபாளையத்தில் ஆசிரியர் ஜீவரத்தினம்(84) கேபிள் ஒயர்களால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த 30 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் முத்துக்குமார் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் முத்துக்குமார் மனைவியிடம் நகைகள் மீட்கப்ட்ட நிலையில் இவர்கள் மேலும் 2 பேருடன் சேர்ந்து 2022 இல் இதே போல் கழுத்தை நெரித்து இரட்டை கொலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

error: Content is protected !!