Virudunagar

News April 10, 2025

சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு

image

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.கோயிலில் மாலை 4 மணிக்கு மேல் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை பூஜாரிகள் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

News April 10, 2025

ராமதாஸ் எடுத்த முடிவு தவறு -திலகபாமா

image

அன்புமணி ராமதாஸிடமிருந்து தலைவர் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாமக மாநில பொருளாளர் சிவகாசி திலகபாமா கருத்து தெரிவித்துள்ளார். இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே, அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான் ஆனால் இந்த முடிவு தவறு எனவும் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

News April 10, 2025

பட்டாசு ஆலை விதிமீறல் 784 வழக்குகள் பதிவு

image

2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டு, பட்டாசு விபத்துகள் 40.74% குறைந்துள்ளதாக 2025-26 ஆண்டுக்கான தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறையின் கொள்கை விளக்க குறிப்பு வெளியீட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 2024-25 இல் விதிமீறிய பட்டாசு தொழிற்சாலை நிர்வாகங்கள் மீது 784 வழக்குகள் பதிவு செய்து இதில் ரூ. 1.37 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 10, 2025

விருதுநகரில் அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே(ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ஸ்ரீவியில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அனுகலாம். ஷேர் செய்யவும்.

News April 10, 2025

திருச்செந்தூர் முருகனைக் காண கால அட்டவணை

image

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி காலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், காலை 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், பின்னர் தீர்த்த வாரியம், உச்சிகால அபிஷேகமும் நடைபெற இருக்கிறது. அண்ணா அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற இருக்கிறது. தமிழ் புத்தாண்டை செந்தூரில் கொண்டாட வரும் பக்தர்களுக்கு அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

News April 9, 2025

புவிசார் குறியீட்டை தொடர்ந்து சூப்பர் வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் தற்போது விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இனிமேல், சம்பா மிளகாய் வத்தலுக்கு, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் அதிகவிலை கிடைக்கும். ஏற்கெனவே, விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு, தனி டிமாண்ட் உள்ள நிலையில், சம்பா மிளகாய் வத்தல் விவசாயிகளுக்கு, இதனை ஏற்றுமதி செய்ய சூப்பரான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 9, 2025

விருதுநகரில் டாஸ்மாக் கடைகள் தற்காலிகமாக மூடல்

image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (FL1) மற்றும் FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை மகாவீரர் ஜெயந்தி தினமான நாளை(ஏப்.10) ஒரு நாள் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார். உத்தரவினை மீறி செயல்பட்டால் உரிமதாரர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

ஆண்டாள்,ரங்கமன்னார் ஏழாம் நாள் காலை புறப்பாடு

image

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக (ஏப்.3) அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 7-ம் திருநாளான இன்று காலை ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் சாலியர் மண்டபத்திற்கு எழுந்தருளி சென்றனர். ஏப்ரல் 11ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

News April 9, 2025

விருதுநகரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

விருதுநகரில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் சூலக்கரையில் நாளை மறுநாள்(ஏப்.11) காலை 10 – 2 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து கலந்து கொள்ளலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 9, 2025

ஊசி செலுத்திய பெண் திடீர் மரணம்

image

சிவகாசி அருகே பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி மகேஸ்வரி (35). இவருக்கு நேற்று தலைவலி ஏற்பட்டதால் சிவகாசி பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது ஊசி செலுத்தியுள்ளனர். பின்னர் வீட்டில் வந்து தூங்கிய மகேஸ்வரிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!