India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மதுரையிலிருந்து சென்னை வந்த Indigo 7593 விமானம் மீனம்பாக்கத்தில் மோசமான வானிலை காரணமாக தரை இறங்க முடியாமல் அரை மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்து பின்னர் விமானம் தரை இறங்கியது. மேலும், சென்னையில் பெய்துவரும் கனமழைக் காரணமாக விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2025 குடியரசு தின விழாவில் சமுதாயம், வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா அன்று வழங்கப்படும். இதில் ஆயுதப்படை, காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் டிச.15 க்குள் விண்ணப்பிக்கலாம். இது 3 அளவுகளில் மூவருக்கு ரூ.20,000, ரூ.10,000, ரூ.5000 காசோலை, தகுதியுரை இதில் அடங்கும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வானிலை மையம் இன்று(டிச.12) முதல் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளதாலும், தாணிப்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு 13.12.2024 முதல் 16.12.2024 வரை சதுரகிாி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை என மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் அறிவித்துள்ளார்.
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இதுவரை 2850க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று(டிச.12) நடைபெற்ற அகழாய்வில் நீல நிற கண்ணாடி மணி, சுடுமண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை முன்னோர்கள் அணிகலன்களாக பயன்படுத்தியுள்ளதாக தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 56.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று(டிச.12) தெரிவித்துள்ளது. குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் 15 மில்லி மீட்டர் மழையும், சாத்தூரில் 6 மில்லி மீட்டர் மழையும், விருதுநகரில் 4 மில்லி மீட்டர் மழையும், திருச்சுழி பகுதியில் 5.20 மில்லி மீட்டர் மழையும், வெம்பக்கோட்டையில் 3.80 மில்லி மீட்டர் மழையும், பதிவாகியுள்ளது.
வரும் 13ம் தேதி திருவண்ணாமலை தீப ஒளி திருநாளை முன்னிட்டு விருதுநகர் மண்டலம் மூலம் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முன்பதிவு பேருந்துகள் இரவு 8 மணிக்கு முன் பதிவில்லா பேருந்துகள் 13ம் தேதி காலை 7 மணிக்கு இயக்கப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று(டிச.11) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கால்நடைகளுக்கான 6வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வரும் 16ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் முகாமில் கலந்து கொண்டு பயன்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை 2024 ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் விழா நாளை(டிச.11) டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற உள்ளது. இதில் விருது பெற விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி ஒன்றியத்தில் சேதுபுரம் ஊராட்சி, விருதுநகரில் கோட்டையூர் ஊராட்சி, சிவகாசியில் நாரணாபுரம் ஊராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஊராட்சி மன்ற தலைவர்கள் நாளை டெல்லியில் விருதை பெற உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அரசு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இயங்கும் பேருந்துகளில் பயணிகளை பாதிக்கக்கூடிய அதிக ஒலியுடன் பாடல்கள் ஒலிபரப்புவதோடு சில பேருந்துகளில் கேலி கிண்டல் செய்வதுபோல் இரட்டை அர்த்தங்களில் ஆபாச பாடல்கள், சாட்கி பாடல்கள் ஒலிபரப்புவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஓட்டுநர், நடத்துனருக்கு உரிய அறிவுரை வழங்கி பேருந்தில் உள்ள ஸ்பீக்கரை டிச.12 க்குள் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டுக்காக வருகிற 13-ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.