Virudunagar

News January 7, 2025

ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவம்

image

ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் பாவை நோன்பு இருப்பதற்காக பெருமாளிடம் நியமனம் பெறும் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று இரவு ஆண்டாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாடவீதி வழியாக பெரிய பெருமாள் சன்னதிக்கு வந்தடைந்தார். இன்று (ஜன.7) முதல் ஜனவரி 14 வரை மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் துவங்குகிறது. இதற்காக தினமும் ஆண்டாள் திருமுக்குளம் எண்ணெய் காப்பு மண்டபத்திற்கு வந்தடைகிறார்.

News January 7, 2025

விருதுநகரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

விருதுநகர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் லதா தலைமையில் நடைபெற்றது. காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விருதுநகர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மின் தொடர்பான புகார்களை மேற்பார்வை பொறியாளரிடம் மனுக்களாக தெரிவித்தனர்.

News January 7, 2025

விருதுநகர் வாக்காளர் பட்டியலில் ஆண்களை விட பெண்கள் அதிகம்

image

விருதுநகர் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆண் 785132, பெண் 823836, இதர வாக்காளர்கள் 256 என மொத்தம் 1609224 வாக்காளர்கள் உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரையில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

News January 7, 2025

விருதுநகருடன் இணைக்கப்படும் ஊராட்சிகள்

image

தமிழ்நாட்டில் பல மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லை விரிவாக்கம் செய்யவும், புதிய நகராட்சிகள், பேரூராட்சிகளை அமைத்து உருவாக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கூரைக்குண்டு, ரோசல்பட்டி மற்றும் சிவஞானபுரம் ஆகிய ஊராட்சிகள் விருதுநகர் நகராட்சியுடன் இணைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

News January 6, 2025

ஆண்டாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பகல் பத்துதிருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற 10ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 7 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம். இன்று (திங்கட்கிழமை) பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. *ஷேர்*

News January 6, 2025

விருதுநகரில் அதிக வாக்காளர்களை கொண்ட சிவகாசி தொகுதி 

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். இந்நிலையில் 7 சட்டமன்ற தொகுதிகளில் அதிகபட்சமாக சிவகாசி தொகுதி அதிக வாக்காளர்களை கொண்டுள்ளது. 1,17,414 ஆண் வாக்காளர்களும், 1,23,034 பெண் வாக்காளர்களும், 27 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,40,475 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

News January 6, 2025

மனைவியை கொலை செய்த கணவர்

image

விருதுநகர் கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்,26. ராஜாத்தி 22 தம்பதியினர் காதலித்து திருமணம் செய்தனர். 2 குழந்தைகள் உள்ளனர்.மனைவி அடிக்கடி போனில் பேசியதால் பார்த்திபன் சந்தேகப்பட்டார். நேற்று இப்பிரச்னையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதில் கரண்டியால் தாக்கியதில் ராஜாத்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது டாக்டர்கள் பரிசோதித்து, அவர் இறந்ததாக தெரிவித்தனர்.

News January 6, 2025

பட்டாசு ஆலை வெடி விபத்து-20 லட்சம் நிவாரணம் வழங்கிடுக

image

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆலை நிர்வாகம் ரூ.10 லட்சம், தமிழக அரசு ரூ. 20 லட்சம் இழப்பீடாக வழங்க விருதுநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,விபத்தில்லா பட்டாசு உற்பத்தி செய்ய தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய முத்தரப்பு குழு அமைத்து பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது

News January 5, 2025

திமுக அரசை சாடிய முன்னாள் அமைச்சர்

image

விருதுநகர், வள்ளியூரில் அதிமுகவின் 53வது ஆண்டு கட்சியின் கொடி ஏற்று விழாவையொட்டி முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர்; திமுக ஆட்சி தறுதலை ஆட்சி, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு கிடையாது. பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் திமுக கட்சி போர்வையில் பின்னால் ஒளிந்து கொள்கின்றன. பொங்கல் பரிசு 1000 வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி வருகிறது என்றார்.

News January 5, 2025

பட்டாசு ஆலை வெடி விபத்து காரணம்

image

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெடி விபத்துக்கு காரணம் உள் குத்தகையே என்று தெரியவந்துள்ளது. சிவகாசியை சேர்ந்த சசிபாலன் என்பவர் வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு தயாரிப்பு ஆலையை உள் குத்தைக்கு எடுத்து நடத்தியுள்ளார். ஆலையின் லைசென்ஸ் பெயரை கூட மாற்றாமல் அதிக அளவிலான பேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் அனுபவம் இல்லாத தொழிலாளர்களை ஈடுபடுத்தியுள்ளார். என்பது போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

error: Content is protected !!