Virudunagar

News March 18, 2025

சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சித்தலைவர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை(மார்ச்.19) பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News March 18, 2025

சிவகாசி இளைஞர் குமரியில் எரித்து கொலை

image

கன்னியாகுமரி அருகே லீபுரம் பாட்டுக்குளத்தில் 2 நாட்களுக்கு முன் எரிந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில் சிவகாசி விளாம்பட்டியை சேர்ந்த ஹரிஹரசுதன் என்பதும், அவர் தூத்துக்குடியில் கொத்தனார் வேலை செய்த போது பழக்கமான லீபுரம் ராபர்ட்சிங்குடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ஹரிஹரசுதன் அடித்து கொலை செய்து எரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

News March 18, 2025

சாத்தூரில் வேலை வாங்கித் தருவதாக ரூ.11.5 லட்சம் மோசடி

image

சாத்தூர் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த மகேந்திரா ராஜா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபடி டி,என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இவரிடம் திருவாரூரை சேர்ந்த ரம்யா என்பவர் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.7 லட்சமும், இவரது தம்பி முரளிக்கு அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.4.5 லட்சமும் பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்து சாத்தூர் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 18, 2025

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

சிவகாசியில் நாளை (18.03.2025) மின் நுகர்வோர் கூட்டம் நடைபெற உள்ளது. மின்செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின் விநியோகம் சார்ந்த குறைகளை நேரிலோ அல்லது மனுவாகவோ வழங்கி தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News March 17, 2025

திருச்சுழி காவலர் டூவீலர் விபத்தில் சிக்கி படுகாயம்

image

திருச்சுழி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருவதாக கூறப்படும் தினேஷ் என்பவர் இன்று டூவீலரில் சென்ற போது பாளையம்பட்டி தனியார் மகால் அருகே விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்தார். இதனை அடுத்து உடனடியாக மீட்கப்பட்ட அவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

News March 17, 2025

சிவகாசியில் ரவுடி வெட்டிப் படுகொலை

image

சிவகாசி ஆலாவூரணியை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர் முனீஸ் நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். அவரது உடலை மீட்ட போலீசார் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 17, 2025

பொம்மைகள் வாங்கி வைத்தால் வேண்டியது நடக்கும்

image

விருதுநகர் மாரியம்மன் கோவிலில் பொங்கலை முன்னிட்டு வேண்டுதலுக்காக மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை வாங்கி வைத்து வழிபடுவது வழக்கம். திருமண வரன் வேண்டுவோர் ஜோடி பொம்மைகளையும், உடல் நலம் பெற ஆண், பெண் பொம்மைகளையும், குழந்தை வரன் வேண்டுவோர் குழந்தை பொம்மைகளையும், வீடு கட்ட வேண்டுவோர் வீடு பொம்மையும் வாங்கி வைத்து வழிபடுவர். பொம்மைகளை வாங்கி வைத்து வழிபட்டால் வேண்டியது நடக்கும் என்பது நம்பிக்கை. SHARE IT

News March 17, 2025

விருதுநகரில் ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம்

image

விருதுநகர் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம் மார்ச்.24 அன்று நடைபெற உள்ளது. இதில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஏதேனும் குறைகள் இருப்பின் அதனை dovirudhunagar.tn@idiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் மார்ச்.30 க்குள் தெரிவிக்க வேண்டும்.

News March 16, 2025

விருதுநகரில் மேடை நாடகம் தேதி மாற்றம்

image

கரிசல் இலக்கிய கழகம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கோமல் சாமிநாதனின் “தண்ணீர் தண்ணீர்” என்ற நாடகமும், தாரிணி கோமலின் “திரெளபதி” என்ற பிரம்மாண்ட மேடை நாடகம் மார்ச்.15,16 அன்று நடத்த திட்டமிடப்பட்டது. தவிர்க்க முடியாத காரணத்தினால், ஏப்.12,13 அன்று இந்த நாடகக் குழுவினரால் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மேடை நாடகம் நடத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

News March 16, 2025

4000க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டெடுப்பு

image

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் 3ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது நடந்து வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையில் 22 குழிகளில் சூதுபவள மணி, தங்கமணி, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள், சுடுமண் உருவ பொம்மை உள்ளிட்ட 4,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!