India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் குடிநீா் இணைப்பில் மின் மோட்டாா் இணைத்து குடிநீா் பிடித்தால், குடிநீரைத் திருடினால் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி எச்சரித்துள்ளார். மாநகராட்சியில் மொத்தம் 38,630 குடிநீா் இணைப்புகள் உள்ள நிலையில் குடிநீா் இணைப்பில் மின் மோட்டாா் இணைத்து தண்ணீா் பிடிப்பது கண்டறியப்பட்டால்,சம்பந்தப்பட்ட குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்படும் என எச்சரிக்கை.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சந்தனகோடாங்கி(45) மடப்புரம் கோவில் செல்லும் வழியில் கோடாங்கி அடித்து குறி செல்லி வந்துள்ளார். நேற்று மாலை இவரை தினேஷ்குமார்(27) வெட்டி விட்டு தப்பிச் சென்ற நிலையில் திருப்புவனம் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தார். போலீசார் தினேஷ்குமாரை கைது செய்த நிலையில், இவரது உறவுக்கார பெண்ணுடன் சந்தனகோடாங்கி தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் வேளானேரியில் 12 வாரத்திற்குள் குடிநீர் மற்றும் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேளானேரியில் குடிநீர் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் முறையாக மேற்கொள்ள கோரிய பொதுநல மனுவில், 12 வாரங்களுக்குள் மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க விருதுநகர் ஆட்சியர் மற்றும் ஊரக மேம்பாட்டு துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, பள்ளி மாணவர்களுக்கான குழந்தைகள் இலக்கிய திருவிழா மார்ச்.20, 21 அன்று கிருஷ்ணன்கோயில் லிங்கா குளோபல் பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில் 4 முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
மதுரை ஈச்சனேரி கிராமத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரின் உடல் நேற்று தீயில் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து பெருங்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மலையரசன் என்பதும்,தனிப்படை காவலராக பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து பெருங்குடி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10, 12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஏப்.10 வரை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு ஸ்ரீவியில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அனுகலாம்.
விருதுநகரில் தாட்கோ மூலமாக 10, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழகுடியின மாணவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டியில் இளங்கலை அறிவியல் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை மாத ஊதியமாக பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
கள்ளிக்குடியை சேர்ந்த ராகுல்(20), மையிட்டான்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா(21) ஆகியோர் முட்டை வண்டியில் லோடு மேனாக பணியாற்றி வந்தனர். நேற்று காலை இருவரும் விருதுநகரில் நண்பர்களை பார்த்து விட்டு கள்ளிக்குடி நோக்கி டூவிலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வடமலைக்குறிச்சி அருகே சென்ற போது நாய் குறுக்கே வந்ததால் டூவிலர் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் கார்த்திக் ராஜா உயிரிழந்தார்.
வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அகழாய்வு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அகழாய்வு குழிகளுக்குள் தண்ணீர் தேங்குவதால் தொடர்ந்த அகழாய்வு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால் தற்காலிகமாக அகழாய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 1 பொதுத் தேர்வில் உயிரியல் தேர்வினை 3149 மாணவர்களும் 4928 மாணவிகளும் ஆக மொத்தம் 8077 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 7965 பேர் தேர்வு எழுதிய நிலையில் 112 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதே போல் தாவரவியத் தேர்வில் 78 பேரும் வணிக கணக்கியல் தேர்வில் 6 பேரும் வரலாறு தேர்வில் 176 பேரும் பங்கேற்கவில்லை.
Sorry, no posts matched your criteria.