India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் எத்துப்பல் கொண்ட மாணவர்களுக்கு மலரும் புன்னகை என்ற திட்டத்தின் கீழ் பல் கிளிப் (BRACES) பொருத்தும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சிகிச்சைக்கு ரூ.30,000 வரை செலவாகும் நிலையில் இத்திட்டத்தில் 600 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பல் கிளிப் பொருத்தப்பட்டது. இத்திட்டம் சிறப்பாக பலன் அளித்துள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகரை சேர்ந்த 15, 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் இருவரை விளம்பர பதாகைகள் அமைக்க பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி சாம் டேவிட் (25) என்பவர் சிவகாசியிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்கும் குளிர்பானத்தில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து மயக்கமடைந்த இருவரையும் நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் சாம் டேவிட் மீது போக்ஸோ வழக்கு பதிந்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர்
ராஜபாளையம் அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் பால் வியாபாரி சுப்பிரமணியன்(55). இவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி மற்றும் மகளை சுப்பிரமணியன் கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் சுப்பிரமணியன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இவரது உடலை மயானத்துக்கு கொண்டு சென்ற போது அதில் ரத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புரப் பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தகுதியுடைய சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் தீ தொண்டு வார விழா அனுசரிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையில் தீ தொண்டு வார விழாவின் ஒரு பகுதியாக நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த வாரம் முழுவதும் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தீயணைப்பு நிலைய அலுவலர் இன்று தெரிவித்தார்.
விருதுநகரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஷிகியூட்டிவ் பிரிவில் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதிற்பட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு எவ்வித முன் அனுபவம் தேவையில்லை. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி பகுதி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பட்டியல் இன்று (பிப்.14) வெளியாகியது. இதில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதாவின் மகன் பிர்லா இன்பம் சிவகாசி மாநகர திமுக இளைஞர் அணி 5ஆம் பகுதி அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிதாக தேர்வான பிர்லா இன்பம் நிதி அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான தங்கம் தென்னரசுவிடம் வாழ்த்து பெற்றார்.
மதுரையில் இருந்து குருவாயூர் செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனை தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் துரைசாமி தலைமையிலான ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கழிவறை அருகே 4 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் இருந்த 120 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்து,ரயிலில் கொண்டு வந்தவர்கள் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகாசியில் செயல்படும் தனியார் அலுமினிய தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டர் பணிக்கு 25 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 40 வயதிற்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,000 – 25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
Sorry, no posts matched your criteria.