India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்கள் தொழிலாளர் தினமான மே.1 அன்று தற்காலிகமாக மூடுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி கடைகள் செயல்பட்டால் மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் செயல்படும் ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலையில் சற்றுமுன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 10 க்கும் மேற்பட்ட அறைகள் சேதமன நிலையில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் இதில் சிக்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் தொடர்ந்து பட்டாசு வெடித்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சிவகாசி அருகே அனுப்பன்குளம் ஊராட்சியில் 2021 முதல் 2025 வரை ஊராட்சிமன்ற தலைவராக இருந்தவர் கவிதா பாண்டியராஜன். இந்த ஊராட்சியில் கடந்த ஆண்டு முடிக்கப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலுவை நிதியை வழங்காமல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் காலம் தாழ்த்துவதாக கூறி யூனியன் அலுவலகத்தில் பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் 1,802 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இதில் நாரணாபுரம் பகுதியில் மட்டும் 46 பேரை நாய்கள் கடித்துள்ளது. தற்போது அனைவரும் நலமுடன் உள்ள நிலையில் நாய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ராஜபாளையத்தில் ஏப்.5,6 அன்று மட்டுமே 87 பேரை நாய்கள் கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காரியாபட்டி அருகே சூரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சூரிய குமார் என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக மல்லாங்கிணறு விஏஓ கரைமேலு என்பவரை அணுகியுள்ளார். அவர் பெயர் மாற்றம் செய்ய ரூ.3500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சூரியகுமார் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறையை நாடி அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை விஏஓவிடம் வழங்கிய போது அவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவுப்படி கடந்த மார்ச். 3-ம் தேதி முதல் பக்தர்கள் தினசரி மலையேறி சென்று வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
‘துளி நீரில் அதிக பயிர்” திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 1100 ஹெக்டர் பொருள் இலக்கும், ரூ.5.50 இலட்சம் நிதி இலக்கும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் நிறுவுவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் MIMIS என்ற இணையத்தின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 பணியிடங்கள் உள்ள நிலையில் மாத ஊதியமாக ரூ.19900 வழங்கப்படும் .இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை rrbchennai.gov.in என்ற ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விருதுநகர் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
விருதுநகர் மாவட்டத்தில் வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்த விபரங்கள் மற்றும் தேவையான கண்மாய் பட்டியல் விபரங்களுடன் கோட்டாட்சியர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். மண் எடுப்பதற்கு உரிய ஆவணங்களான பட்டா மற்றும் ஆதார் எண்ணுடன் பதிவு செய்து, அதற்கான ரசீதினை பெற்று கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க விருதுநகர், ஸ்ரீவி, ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டியில் ஏப்.25 முதல் மே.01 வரை சிறந்த திரைப்படங்கள் திரையிடும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் 14 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 8608204154 என்ற எண்ணில் அழைக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.