Virudunagar

News October 17, 2024

விருதுநகர் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை!

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களிலும் சட்ட விரோதமாக பட்டாசுகள் எடுத்துச்செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க விருதுநகர் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் செல்வி தலைமையில் சிறப்பு தனி படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் செல்வி தலைமையிலான காவல்துறையினர் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

News October 17, 2024

விருதுநகர் ரயில்களில் தனிப்படை அமைத்து சோதனை

image

விருதுநகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகர், சிவகாசி வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் சட்ட விரோத பட்டாசுகள் எடுத்து செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விருதுநகர், சிவகாசி, திருத்தங்கல் ரயில்வே ஸ்டேஷன்களிலும் ஆய்வு செய்யப்பட்டது.

News October 17, 2024

விருதுநகரில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (அக்.15) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 18ஆம் தேதி வெள்ளி அன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை நாடுபவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News October 16, 2024

பட்டாசுக் கடைகளை கண்காணிக்க 14 குழுக்கள் அமைப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் நிரந்தர உரிமம் பெற்ற 2,400 பட்டாசுக் கடைகள் உள்ளன. இந்த பட்டாசுக் கடைகளில் விபத்து ஏற்படாமல் இருப்பதைக் கண்காணிக்க காவல்துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறையினர் அடங்கிய 14 குழுக்களை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அமைத்துள்ளார். இந்தக் குழுவினர் பட்டாசுக் கடைகளின் உரிமம், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை கண்காணிப்பர்.

News October 16, 2024

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் சேமித்து வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு நெகிழிப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 16, 2024

விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை(அக்.17) காரியாபட்டி, கல்லுப்பட்டி, மந்திரி ஓடை, பாப்பனம், கம்பிக்குடி, புல்வாய்க் கரை, பூம்பிடகை, பிள்ளையார் குளம், ஆவரங்குளம், நெடுங்குளம், மற்றும் அதன் பகுதிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி சித்தலாம், புதூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் பகுதிகள், ஆவியூர் அரசங்குளம், குரண்டி மீனாட்சிபுரம் பகுதிகள் ஆகிய இடங்கள் மின் தடை ஏற்படவுள்ளன.

News October 16, 2024

விருதுநகர்:குடியிருப்பு பகுதியில் பன்றி வளர்த்தால் நடவடிக்கை

image

பன்றிகளை வளர்க்க விரும்புவர்கள் அதற்கென தகுந்த இடத்தில் மட்டுமே வளர்க்க வேண்டும். பன்றிகளை வீட்டிலேயே வளர்த்தாலோ, குறிப்பாக சுகாதார முறைப்படி பராமரிக்காத இடத்தில் வளர்த்தாலோ மனிதர்களுக்கு கடுமையான நரம்பியல் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் பன்றிகள் வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News October 16, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (அக்.15) சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கக்கூடிய 40 பள்ளி மாணவிகளுடனான காபி வித் கலெக்டர் என்ற 109வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.

News October 15, 2024

விருதுநகரில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (அக்.15) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 18ஆம் தேதி வெள்ளி அன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை நாடுபவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

பட்டம்புதூர் பகுதியில் நாளை மருத்துவ காப்பீடு முகாம்!

image

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு முகாம் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அந்தந்த வட்டார பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் நாளை விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பட்டம்புத்தூர் பகுதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு முகாம் நடைபெற உள்ளது. எனவே அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட நிர்வாகம் அழைப்பு.