Virudunagar

News September 22, 2025

விருதுநகர் பட்டாசு விபத்தில் அதிர்ச்சி தகவல்

image

விருதுநகர் மாவட்டத்தில் 2011 – 2024 வரை 14 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நடந்திருப்பதாக புள்ளிவிவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துகளில் 379 பேர் உயிரிழந்த நிலையில் 320-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதில், 2012-ம் ஆண்டு செப்.5 முதலிபட்டி விபத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் இன்று மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 22, 2025

விருதுநகர்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

விருதுநகர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <>க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 22, 2025

விருதுநகரில் 10வது படித்திருந்தால் 25 ஆயிரம் சம்பளம்

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25க்கு மேற்பட்ட கேஷியர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாத 18 – 35 வயதுகுட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக் செய்து<<>> அடுத்த மாதம் 10-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News September 22, 2025

விருதுநகர்: கார் மோதி தூக்கி வீசப்பட்ட முதியவர் பலி

image

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் 39. இவர் தற்போது ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருகிறார். இவர் காரில் செப். 19ல் இரவு 11:30 மணிக்கு விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சென்ற போது மோதியதில் ரோட்டை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்தார். பஜார் போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

News September 22, 2025

விருதுநகர்: இலவச தையல் மிஷின்.! APPLY பண்ணுங்க!

image

விருதுநகர் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியபெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் மிஷின்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். SHARE பண்ணுங்க.

News September 22, 2025

காரியாபட்டியில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

image

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கீழஉப்பலிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ். இவர் மனைவி முத்து நேற்று தனது தோட்டத்தில் உள்ள மின் இணைப்பில் இருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆவியூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 22, 2025

விருதுநகருக்கு வரும் துணை முதல்வர்

image

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தருகிறார். அதில்,
1. செப்.22 இரவு 7 மணி – ராம்கோ விருந்தினர் மாளிகையில் வரவேற்பு.
2. செப்.23 காலை 10 மணி – ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்.
3. காலை 11 மணி – தொகுதி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்.
4.மாலை 5 மணி – கிருஷ்ணன்கோவிலில் ஸ்ரீவி தொகுதி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்.

News September 22, 2025

ஸ்ரீவி நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பூர நட்சத்திரத்தன்று தான் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருவது வழக்கம். அதேபோல் நேற்று புரட்டாசி மாத பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு  நந்தவனத்தில் ஆண்டாள் எழுந்தருளினார். இதனையடுத்து சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News September 21, 2025

விருதுநகர்: பட்டாவில் திருத்தமா?

image

விருதுநகர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு மாவட்ட அதிகாரியை 04562 -252723 அணுகலாம். SHARE பண்ணுங்க

News September 21, 2025

விருதுநகர்: கேஸ் சிலிண்டர் புக் செய்வது இனி ரெம்ப ஈஸி

image

விருதுநகர் மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க

error: Content is protected !!