Virudunagar

News July 7, 2025

சிவகாசி வெடி விபத்தில் முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

image

கீழதாயில்பட்டி பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம், பலத்த காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம், லேசாக காயமடைந்தவருக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.

News July 7, 2025

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

image

சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் 31.07.2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். மேலும், விபரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்களான 4562-290953, 94990-55823, ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News July 6, 2025

பட்டாசு வெடி விபத்து ஒரு சாபக்கேடு – பிரேமலதா விஜயகாந்த்

image

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்தில் ஆலையின் உரிமம் ரத்து என்பது கண் துடைப்பாக இல்லாமல் இனி வரும் காலங்களில் விபத்து ஏற்படாத வகையில் சட்டம், அரசாணை பிறப்பிக்க வேண்டும். பட்டாசு வெடி விபத்து விருதுநகர் மாவட்டத்திற்கு ஒரு சாபக்கேடாக உள்ளது. பட்டாசு தொழிலாளர்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

News July 6, 2025

BREAKING சாத்தூர் பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து

image

கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட விபத்தில் பாலகுருசாமி என்பவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்அனர். இந்நிலையில் ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

News July 6, 2025

BREAKING சாத்தூர் வெடி விபத்தில் போர்மேன் கைது

image

சிவகாசியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான கீழதாயில்பட்டியில் செயல்படும் ஷிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பாலகுருசாமி என்பவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போர்மேன் லோகநாதனை வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 6, 2025

BREAKING சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

image

சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் செயல்பட்டு ஷிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் சற்றுமுன் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 10 கிமீ தொலைவிற்கு தொலைவிற்கு அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.

News July 6, 2025

சிவகாசி: சீல் வைத்த ஆலையில் பட்டாசு உற்பத்தி

image

வெம்பக்கோட்டை கங்கரக்கோட்டையை சேர்ந்த பால்பாண்டியனுக்கு சொந்தமான லட்சுமி பட்டாசு ஆலை விதிமீறல் காரணமாக சில மாதங்களுக்கு முன் சீல் வைக்கப்பட்டது. சீல் வைத்த இந்த ஆலையில் வி.ஏ.ஓ. கலைச்செல்வி தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதில் வேங்கையன் என்பவர் பேன்சி ரக பட்டாசு தயாரித்தது தெரியவர அவரை கைது செய்து பட்டாசு, மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஆலை உரிமையாளர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

News July 5, 2025

விருதுநகர்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 18.07.2025 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மனு மூலம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News July 5, 2025

வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலைக்கு சீல்

image

வெம்பக்கோட்டை செவல்பட்டி ஸ்ரீ மகேஸ்வரன் பட்டாசு ஆலையில் வி. ஏ.ஓ. சீனிராஜ் தலைமையில் வருவாய்த் துறையினர், போலீசார் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பேன்சி ரக பட்டாசுகளை மரத்திற்கு அடியில் வைத்து தயாரித்த சிவகாசி சேர்ம சங்கரை (37) போலீசார் கைது செய்தனர். அதில் 55 பேன்சி ரக பட்டாசுகள், மிஷின் திரி மரப்பலகை, மூலப் பொருட்களை பறிமுதல் செய்து ஆலைக்கு சீல் வைத்தனர்.

News July 5, 2025

வத்திராயிருப்பு அருகே முதியவர் வெட்டிக் கொலை

image

வத்திராயிருப்பு மறவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணமூர்த்தி (57) கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், பாலகிருஷ்ணமூர்த்திக்கும், இவரது மகன்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாலசுந்தரம், அஜித்குமார் ஆகிய இருவரும் பாலகிருஷ்ணமூர்த்தியை அருவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இது குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!