Virudunagar

News September 7, 2024

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

ராஜபாளையம் சுரங்கப்பாதை பணிகள் காரணமா செங்கோட்டை – மதுரை ரயில் செப். 8, 9 ஆகிய நாட்களில் செங்கோட்டையிலிருந்து 50 நிமிடங்கள் கால தாமதமாக மதியம் 1 மணிக்கு புறப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சுரங்கப்பாதை பணிகளில் முக்கிய பணிகள் நிறைவு பெற்றதால் செப். 8, 9 ஆகிய நாட்களில் செங்கோட்டை -மதுரை ரயில் செங்கோட்டையிலிருந்து வழக்கமாக புறப்படும் நேரமான மதியம் 12.10 மணிக்கு புறப்படும்.

News September 7, 2024

வெம்பக்கோட்டை அகழாய்வை பாராட்டிய தமிழக அரசு

image

வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முழுமையான செங்கல் கட்டுமான சுவர் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதன் புகைப்படத்தையும், அதன் விவரங்களையும் வெளியிட்டுள்ள தமிழக அரசு முன்னோர்களின் தொழில் குணமாக இருக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News September 7, 2024

கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு

image

அருப்புக்கோட்டை வருவாய் கோட்டத்தில் பணிபுரிந்து வந்த 5 கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்கி கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு நேற்று  உத்தரவிட்டுள்ளார். அதன்படி அருப்புக்கோட்டை கோட்டத்தில் பணிபுரிந்து வந்த கிராம உதவியாளர்கள், கருப்பசாமி, சுந்தரி, தெய்வக்கனி , சூரியமூர்த்தி மற்றும் சுரேஷ் ஆகிய ஐந்து பேருக்கு கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.‌

News September 7, 2024

கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு

image

அருப்புக்கோட்டை வருவாய் கோட்டத்தில் பணிபுரிந்து வந்த 5 கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்கி கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு நேற்று  உத்தரவிட்டுள்ளார். அதன்படி அருப்புக்கோட்டை கோட்டத்தில் பணிபுரிந்து வந்த கிராம உதவியாளர்கள், கருப்பசாமி, சுந்தரி, தெய்வக்கனி , சூரியமூர்த்தி மற்றும் சுரேஷ் ஆகிய ஐந்து பேருக்கு கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.‌

News September 6, 2024

வாகன விபத்தில் ராணுவ வீரர் பலி

image

வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன், ராணுவ வீரர். இவர், சிக்கிம் மாநிலம், ரெனோக்-ரோங்க்லி நெடுஞ்சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தபோது, 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். இதையடுத்து தங்கபாண்டியனின் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட உள்ளது.

News September 6, 2024

நன்கொடை வழங்க அழைப்பு விடுத்த விருதுநகர் ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “அருங்காட்சியகத் துறையின் மூலம் சென்னையில் அமைக்க உள்ள சுதந்திர தின அருங்காட்சியகத்திற்காக பொதுமக்களின் பங்களிப்பை கூறும் வகையில், இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்பான பொருட்கள் இருப்பின் நன்கொடையாக வழங்கலாம்” என தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

புத்தகத் திருவிழாவை முன்னிட்டு குறு மாரத்தான் போட்டி

image

விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 7ம் தேதி வரை கே வி எஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மூன்றாவது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பொதுமக்களுக்கான குறு மாரத்தான் போட்டி வரும் 15ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. போட்டியானது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்க உள்ளது.

News September 6, 2024

விருதுநகர் மாணவர்களுக்கு சிறப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் கல்வித்துறை மற்றும் வனத்துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இளம் பசுமை ஆர்வலர் என்ற சிறப்பு பயிற்சி முகாம் வரும் 8ம் தேதி அன்று மாவட்டத்தில் 4 இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் 7904267235 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News September 6, 2024

விருதுநகரில் நாளை சிறப்பு கருத்தரங்கம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “வ உ சி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாளை விருதுநகர் ஸ்ரீ அம்பாள் கிராண்ட் அரங்கத்தில், “வ.உ.சி-யும் இலக்கியமும்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில், கலை இலக்கிய ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்கள் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திட்டங்கள் மூலம் விவசாயிகள் விவசாய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தனி நபர் பட்டதாரிகள் தொழில் முனைவோராக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் பயன் அடையலாம்” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!