India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக ஆகஸ்ட் 17 முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
விருதுநகரில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் ஜெயசீலன் பல்வேறு அதிகாரிகளுக்கு விருது வழங்கினார். இதில், சிறப்பாக பணியாற்றிய 101 போலீசார், 2 தீயணைப்புத்துறை வீரர்கள், மாவட்ட நிலை அலுவலர்கள் 20 பேர் உள்பட் 463 பேருக்கு விருது வழங்கப்பட்டது. மேலும், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் 3பேர், 2 பேருக்கு பசுமை சாதனையாளர் விருது ஆகியனவும் வழங்கப்பட்டன.
சிவகாசியில் சுமார் 1100 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் ஆண்டுதோறும் ஆடி முதல் தேதி மற்றும் கடைசி தேதியன்று பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாத கடைசி நாளான நாளை அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது குலதெய்வ வழிபாடு, சுற்றுலா தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா நாளை நடைபெறுகிறது. திருவிழாவிற்காக தென் மாவட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் இருக்கன்குடியில் வந்த வண்ணம் உள்ளனர். மதியம் 12 மணிக்கு மேல் அம்மன் வீதி உலா நடைபெறும். சாத்தூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் 1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் அருகே சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் நாளை (ஆக.16) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலைநாடுபவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
2024 – 25 கல்வியாண்டின் காலாண்டு தேர்வு அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பின்தங்கிய பள்ளிகளுக்கு தனிக் கவனம் செலுத்தி தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 26 பள்ளிகள், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 15 பள்ளிகள் என 41 பள்ளிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கேட்டில் ரூ.61.74 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு ஜூலையில் பூமிபூஜை போடப்பட்டது. மேம்பால பணிக்காக தேர்வு செய்யப்பட்ட மாற்றுப்பாதையில் ஏற்கனவே இரு நாட்கள் சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது மாற்றுப்பாதை சேதமடைந்தததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே மாற்றுப்பாதை சீரமைப்பு பணி நிறைவு பெற்ற பின் ரயில்வே கிராசிங்கை மூட சப் கலெக்டர் ப்ரியா உத்தரவிட்டுள்ளார்
வெம்பக்கோட்டையில் 3ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அகழ்வாராய்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அகழாய்வில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நேற்றும், கனமழையால் அகழாய்வு குழிகள் அனைத்தும் மூடப்பட்டது.
நாட்டின் 78 வது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் சிவகாசி மாநகராட்சி அலுவலகம் மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் காட்சி பொதுமக்களின் கண்களுக்கு விருந்தளித்துள்ளது . மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி அலுவலகத்தில் மூவர்ண விளக்குகள் பொருத்தப்பட்டு மூவர்ண தேசியக்கொடி போர்த்தியது போல் மாநகராட்சி அலுவலகம் காட்சியளித்தது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலனுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருது சுதந்திர தினத்தன்று வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று உயர்கல்வி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தியமைக்காக நல்லாளுமை விருதிற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் 2 விருதுகள் பெற உள்ளார்.
Sorry, no posts matched your criteria.