India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி(55). இவர் தனியார் நிறுவனத்தில் தோட்ட வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வேலுச்சாமி பந்தல்குடியிலிருந்து தனியார் சிமெண்ட் கம்பெனி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியட்தில் வேலுச்சாமி உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் புகையிலை விற்பனை கண்டுபிடிக்கப்பட்டால் முதல் முறை ரூ.25,000 அபராதமும் 15 நாட்கள் கடை மூடி சீல் வைக்கப்படும். இரண்டாவது முறை தவறு செய்தால் ரூ.50,000 மற்றும் ஒரு மாதம் கடை மூடி சீல் வைக்கப்படும். மூன்றாவது முறையாக தவறு செய்தால் ரூ.1 லட்சம் அபராதமும் மூன்று மாத கடை மூடி சீல் வைக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக விருதுநகர் மண்டல துணை தாசில்தார் ராதாகிருஷ்ணன் தேர்தல் துணை தாசில்தார் ஆகவும், திருச்சுழி மண்டல துணை தாசில்தார் ராஜாராம் பாண்டியன் தேர்தல் துணை தாசில்தார் என மாவட்டத்தில் 6 துணை தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர், சிவகாசி, சாத்துார் சுற்றுப்பகுதியில் 1,080 பட்டாசு ஆலைகள் உள்ளன. நாட்டின் மொத்த உற்பத்தியில், 95 சதவீத பட்டாசுகள் இங்கு தான் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் பட்டாசு வெடிக்க பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் செய்கை தெரியாது நிற்கும் அங்குள்ள வியாபாரிகள் இதுவரை சிவகாசிக்கு மொத்த ஆர்டர் கொடுக்க வராததால் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் கவலையில் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே கொங்கன்குளம் கிராமத்தில் போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது கொங்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் தனது கோழிப்பண்ணையில் வைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், பட்டாசு தயாரித்த பாலமுருகன் மீது வழக்கு பதிந்து பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்டம் முழுவதும் போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரையில் மட்டும் 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 9 கடைகள் மற்றும் ஒரு வாகனத்திற்கு ரூ.2,50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ராஜபாளையம் துணைமின் நிலையம் மற்றும் அருப்புக்கோட்டை அருகே முத்து ராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செப். 12) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் பணிகள் காரணமாக மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிவகாசி அருகே குமிழங்குளம் கிராமத்தை சேர்ந்த மினரல் வாட்டர் நிறுவன உரிமையாளர் சௌந்தர்ராஜன் (84) கடந்த 16 ம் தேதி அதே நிறுவனத்தில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் 50 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் திணறும் போலீசார் இரண்டு தனிப்படை அமைத்து மதுரை உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டு விசாரணை நடத்துகின்றனர்.
கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2012 ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.பின்னர் இந்த வழக்கிலிருந்து 2022 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து இந்த வழக்கு நாளை ஸ்ரீவி.,மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
சிவகாசி அருகே சங்கரலிங்காபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் சிறார்களுக்கான ஓவியத்திறனை மேம்படுத்தும் ஓவியப்போட்டி இன்று நடைபெற்றது. சிறார்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் பல்வேறு விதமான ஓவியங்களை வரைந்து சிறார்கள் அசத்தினர். சிறந்த ஓவியங்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.