India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று (மே.02) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி தலைமையில் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான தொழிலாளர் தினத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் சட்ட விதிகளை பின்பற்றாமல்,தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 56 கடைகள், 32 உணவக நிறுவனங்கள், 9 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 97 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரி வெடி விபத்தில் நேற்று மூன்று பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கும் கல்குவாரி நிர்வாகம் சார்பாக தலா 12 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. 50,000 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமாகவும், 11.50 லட்சம் காசோலையாகவும் வழங்கப்பட்டது.
கரியாபட்டி அருகே நேற்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதில் கல்குவாரியின் உரிமையாளர் சேது நேற்று கைது செய்யப்பட்டார். வெடிபொருள் சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் ராஜ்குமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான ராம்ஜி, ராமமூர்த்தியை போலிசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சிவகாசியில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், தமுஎகச மற்றும் ஜே.சி.ஐ சிவகாசி டைனமிக் இணைந்து நடத்தும் கோடைகால புத்தக கண்காட்சி நேற்று முதல் துவங்கியுள்ளது. புத்தக கண்காட்சியை துவக்கி வைத்த மேயர் சங்கீதா இன்பம் புத்தக அரங்கினை பார்வையிட்டார். இதில் 10 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல் குவாரியில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 3 பேர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும் என்றார்.
காரியாபட்டி அருகே இன்று காலையில் சுமார் 1500 கிலோ வெடிமருந்துகள் வெடித்துச் சிதறியதில் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அக்குவாரியின் உரிமையாளர் சேதுராமன் என்பவரை போலீஸார் சற்றுமுன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான ராஜ்குமார், ராம்குமார் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி சுமீரன் சர்மா தலைமையிலான குழுவினர் சோதனை செய்தனர். ஆய்வில் விபத்து ஏற்பட்ட வெடிமருந்து குடோனிலிருந்து தான் வெடிமருந்துகள் சேகரித்து வைக்கப்பட்டு மாவட்டம் முழுவதுமுள்ள குவாரிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டதும், 1500 கிலோ வெடிமருந்து அந்த குடோனில் வைக்கப்பட்டிருக்ககலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
காரியாபட்டி, ஆவியூர் கல்குவாரியில் இன்று இறக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதில் வெடிபொருள் கொண்டு வரப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர் கந்தசாமி, துரை, குருசாமி, என்ற 3 பேர் உயிரிழந்தனர். அதில் இருவர் ராஜபாளையம் எனவும், மற்றொருவர் மதுரை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. வெடிபொருட்கள் முழுமையாக வெடிக்காமல் சிதறி கிடப்பதால் மீண்டும் வெடிக்கக்கூடும் என்பதால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆவியூர் அருகே உள்ள கடம்பன்குளம் ஊராட்சியில் சேது என்பவருக்கு சொந்தமான குவாரியில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு உடல்கள் சிதறி கிடக்கின்றன. வெடி மருந்துகள் இன்னும் முழுமையாக வெடித்து சிதறாததால் மீண்டும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அப்பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.