India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாத்தூர் முத்தால்நாயக்கன்பட்டி திருமுருகன் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் வீடுகள் கடும் அதிர்வுக்கு உள்ளாகியுள்ளன. விபத்துக்கள் பற்றி அருகில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மிகப்பெரிய அளவில் வெடி விபத்து ஏற்பட்ட காரணத்தினால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டுள்ளன. சேத விவரம் இதுவரை சரியாக தெரியவரவில்லை.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் விருதுநகர் மாவட்டத்தில் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு முகாம் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் அக்டோபர் 10 வரை நடைபெறுகிறது. இதுவரை மாவட்டத்தில் 2710 பேர் பங்கேற்றுள்ளனர். 1978 பேர் புதிய மருத்துவ காப்பீடு அட்டை பெற்றுள்ளனர். எனவே பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசின் கீழ் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம் உட்பட 20 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்க கூடுதல் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீவி அருகேயுள்ள மம்சாபுரம் பகுதியில் இருந்து 50 பேருடன் சென்ற மினி பேருந்து மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி மாணவர்களான நிதீஷ்குமார்,வாசுராஜ் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 32பேர் காயமடைந்தனர். பின்னர் மாவட்ட எஸ்பி அரசு மருத்துவமனைக்கு வந்து காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி,மருத்துவரிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
விருதுநகர் கே.வி.எஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பொருட்காட்சி மைதானத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா இன்று முதல் அக்டோபர் 7 வரை நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. எனவே பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் புத்தகத் திருவிழாவில் பங்கேற்று பயன்பெற ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று காலை 8:30 மணியளவில் மம்சாபுரத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற மினி பஸ் காந்திநகர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்பு துறையினர் வந்து மீட்பு பணி விரைவாக நடைபெற்று கொண்டிருக்கிறது..
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (செப்.26) மாணிக்கம் தாகூர் எம்பி தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கழிப்பறை வசதி இல்லாத 171 அங்கன்வாடி மையங்கள் மாவட்டத்தில் உள்ளன எனவும், இவற்றில் தாமதம் இன்றி விரைந்து பணிகளை செய்ய வேண்டும் எனவும் கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்பி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உள்ளிட்டோர் அறிவுறுத்தினர்.
விருதுநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று (செப்.27) மாலை 4 மணி அளவில் விருதுநகர் கந்தசாமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தில் வருகின்ற 29ம் தேதி விருதுநகர் வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று (செப்.27) மூன்றாவது புத்தகத் திருவிழா கோலாகலமாக துவங்குகிறது. புத்தகத் திருவிழாவில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் கவிஞர்கள் பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். மேலும் பல்வேறு துறை சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எனவே புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவு ஊட்டச்சத்து திருவிழா மற்றும் விழிப்புணர்வு போட்டி விருதுநகர் யூனியன் அலுவலக வளாகத்தில் நேற்று (செப்.26) நடைபெற்றது. இதில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிலிருந்து மகளிர் சுய உதவி குழுவினர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.