Virudunagar

News October 1, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி முகநூல் பக்கம்

image

விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் போலியாக அவரது புகைப்படத்தை பயன்படுத்தி முகநூல் பக்கம் துவங்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் தனது நண்பர் ராணுவ வீரர் தமிழகத்திலிருந்து பணியிட மாற்றமாவதால் வீட்டு உபயோக பொருட்களை வாங்கி கொள்ளுமாறு ஆட்சியர் போல் முகநூல் பக்கத்தில் உரையாடி நூதன மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 1, 2024

விருதுநகரில் துணை முதல்வர் பரிசளிப்பு

image

விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை வருவாய் துறை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் மாண்புமிகு திரு இராமச்சந்திரன் அவர்கள் நிதி துறை அமைச்சர் மாண்புமிகு திரு தங்கம் தென்னரசு அவர்கள் வரவேற்றனர் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர் நினைவு பரிசு & ஊனமுற்றவர் இருசக்கர வாகன வழங்கப்பட்டது… நிகழ்வில் பொது மக்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…

News October 1, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக விருதுநகர் வன்னிய பெருமாள் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. எனவே வேலை நாடுபவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 1, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுகிறது. மேலும் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News October 1, 2024

விருதுநகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்டஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நேற்று தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர் நல வாரியம் மூலம் மாவட்டத்தில் உள்ள 1 பயனாளிக்கு ரூ.1500 மதிப்பில் மூக்குக் கண்ணாடி நிதியுதவியும், 8 பயனாளிகளுக்கு தலா ரூ.5000 மதிப்பில் திருமண உதவிகள் என மொத்தம் 54 பயனாளிகளுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.

News October 1, 2024

கொலை செய்தவர்களை கைது செய்ய கோரி மறியல்

image

வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி சர்ச் தெருவைச்  சேர்ந்தவர் முத்துக்குமார்(26) என்ற இளைஞரை இன்று ஊரணித்தெரு தனியார் தோப்பு பகுதியில் வைத்து மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்நிலையில் கூமாபட்டி பகுதியில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கொலை செய்யப்பட்ட முத்துக்குமாரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News September 30, 2024

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 4 பேர் கைது

image

சிவகாசி பகுதியில் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விஸ்வநத்தம் பகுதியில் தகரசெட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்த கணேசமூர்த்தி (40), நாகராஜ் (44) அவரது மனைவி அழகுலட்சுமி (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் வடமலாபுரத்தில் வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்த கணேசனை கைது செய்து பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

News September 30, 2024

வத்திராயிருப்பு அருகே இளைஞர் வெட்டிக்கொலை

image

வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி சர்ச் தெருவைச்  சேர்ந்தவர் முத்துக்குமார்(26) என்ற இளைஞரை இன்று ஊரணித் தெரு தனியார் தோப்பு பகுதியில் வைத்து மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இது குறித்து தகவலறிந்த கூமாபட்டி போலீசார் பிரேதத்தை மீட்டு உடற் கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 30, 2024

இருக்கன்குடியில் மின்சாரம் தாக்கி குழந்தை பலி

image

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சம்யுக்தா என்ற 5 வயது குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் ஏற்கனவே பல முறை புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 29, 2024

450 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 450 கிராம ஊராட்சிகளில் அக்டோபர். 2 அன்று கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், ஊராட்சி தணிக்கை அறிக்கை, தூய்மை குடிநீர் வினியோகம், ஜல்ஜீவன் இயக்கம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!