Villupuram

News November 12, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் 9 பேர் பணியிட மாற்றம்

image

விழுப்புரம் மாவட்டம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள் செஞ்சி கோவிந்தன் சாத்தம்பாடி குறுவட்டத்திற்கும், சிறுவாடி ஜெய்கணேஷ் செஞ்சிக்கும், திண்டிவனம் கோட்ட கலால் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கோமதி சிறுவாடிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் மொத்தம் மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 9 பேர் பணியிட மாற்றம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி நேற்று (நவ 11) உத்தரவிட்டுள்ளார்.

News November 12, 2024

இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பயனாளிகளுக்கு முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் முதிர்வுத்தொகைக்கான வங்கி வரைவோலையை மாவட்ட ஆட்சியர் சி.பழனி வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மு.பரமேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் உடன் இருந்தனர்.

News November 12, 2024

விழுப்புரத்தில் உள்ள மதுபான ஆலையை மூட வலியுறுத்தி மனு

image

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் எல்லீஸ் சத்திரம் சாலையில் இயங்கி வரும் தனியார் மதுபான ஆலையை மூட வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. மனுவில், மதுபான ஆலையின் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதாகவும், இந்த கழிவு நீரை ஏரியில் கொண்டு சேர்ப்பதால், ஏரியில் உள்ள தண்ணீரும் மாசுபடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

News November 11, 2024

விழுப்புரம் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (11.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News November 11, 2024

மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி இன்று (11.11.2024) பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

News November 11, 2024

“மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றக் கூடாது”

image

திண்டிவனம் அருகே உள்ள மேல்மாவிலங்கை ஊராட்சி கல்பாக்கம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இன்று கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், தங்களது மயானத்திற்கு அருகில் புதிதாக கட்டியுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை அகற்றக்கூடாது என்றும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

News November 11, 2024

விழுப்புரத்தில் உறுதியளித்த அமைச்சர் 

image

பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவர்களை தமிழக அரசு கைவிட்டு விடாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவச கல்வி, ஆசிரியர்கள் பாதுகாப்பு மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நேற்று  நடைபெற்றது.

News November 11, 2024

விழுப்புரம்  அருகே விபத்து: இரண்டு பேர் மரணம் 

image

விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் அருகே நேற்று விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்த காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்று கொண்டிருந்த மூன்று பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

News November 11, 2024

கடலோர பாதுகாப்பு பணியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

இந்திய கடலோர பாதுகாப்பு படையில் சேர விருப்பமுள்ள விழுப்புரம் கடலூர் மாவட்ட மீனவ சமுதாய சேர்ந்த இளைஞர்கள், கடலூர் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி பிளஸ் டூ தேர்வில் 50% மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய நபர்களுக்கு 3 மாத இலவச பயிற்சி வழங்கப்படும் என கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 10, 2024

அரசு பேருந்தும், வேனும் மோதி விபத்து: 15 பேர் காயம்

image

விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு நோக்கி சென்ற அரசு பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 15 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை மக்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.