India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நவம்பர் மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் திமுக மாவட்ட பொறுப்பாளர் பொன் கௌதமசிகாமணி, நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில், பாக முகவர்கள், சார்பு அணி நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில், ஜன.1ஆம் தேதி அன்று 18 வயதுடையவர்களை புதிய வாக்காளர்களாக பதிவு செய்தல், தகுதியற்ற வாக்காளர்களை நீக்குதல், தகுதியான வாக்காளரை சேர்த்தல் வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவ.13) பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, அரியலூர், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மக்களே உங்க ஏரியாவில் மழையா?
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (12.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு உங்களது புகார்களை அல்லது அவசர உதவிக்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் அருகே பணம்குப்பம் காலனி பகுதிக்கு இடுகாடு கேட்டு இறந்தவரின் உடலை விழுப்புரம்-புதுவை தேசிய நெடுஞ்சாலையின் நடுவே வைத்து மறியல் போராட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் ஈடுபட்டனர். பின்பு வருவாய் துறை மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அடக்கம் செய்வதற்கு இடம் அளிக்க நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
விழுப்புரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 9 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சுகந்தன் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதித்தனர். தொடர்ந்து வேறு கடைகளில் விற்கப்படுகிறதா எனவும் கண்காணித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், சி.மெய்யூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் (14.11.2024) வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறார்.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லும் போது கவனமாக செல்லவும். உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
காணை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனையடுத்து அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் பழனி, விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன், விக்கிரவாண்டி எம்எல்ஏ சிவா, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருந்தனர்.
கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய ரவுடி 8 மாதத்திற்கு மேலாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் சென்னையில் பதுங்கியிருந்த விழுப்புரம் ரவுடி மெண்டல் கதிர் என்கின்ற கதிரை விழுப்புரம் நகர காவல் துறையினர் சென்னையில் வைத்து கைது செய்து அவரை விழுப்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
Sorry, no posts matched your criteria.